சிவகங்கயில் பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஐ.ஜி அலுவலக ஊழியர் கைது

Youtube Video

சிவகங்கையில் பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி பெற்றோரை சுட்டுக் கொன்று விடுவதாக கூறி நண்பனின் 7 வயது மகளை இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார் மதுரை ஐ.ஜி. அலுவலக ஊழியர். வக்கிர நபர் தற்போது போக்சோவில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அவர் சிக்கியது எப்படி?

 • Share this:


  7 வயது சிறுமியிடம் 2 ஆண்டுகளாகப் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார் வக்கிர புத்தி கொண்ட பாலாஜி. நண்பனின் குழந்தை என்றும் பாராமல் கொடூரமாக நடந்து கொண்ட பாலாஜியை அவரது மனைவி உள்ளிட்டோரே போலீசிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர். நடந்தது என்ன?

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன்நகர் பகுதியில் வசிப்பவர் 40 வயதான பாலாஜி. மற்றுத்திறனாளியான இவர் மதுரை ஜ.ஜி அலுவலகத்தில் தட்டச்சராக பணியற்றி வருகிறார். இவர் மனைவி சத்யா, மதுரை அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பாலாஜி வீட்டருகே அவரது நண்பர் வசிக்கிறார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

  அவர்களில் 7 வயது சிறுமியிடம், 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலாஜி பொம்மைத் துப்பாக்கியை காட்டி பெற்றோரை சுட்டுக் கொன்று விடுவதாக அச்சுறுத்தியுள்ளார். அதை உண்மை என நம்பிய சிறுமியும் பாலாஜி சொல்வதைக் கேட்பதாகக் கூறவே சிறுமி என்றும் பாராமல் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும் இதை பெற்றோரிடம் கூறினால் சுட்டு விடுவதாக மிரட்டவே சிறுமி பயத்தில் பெற்றோரிடம் எதையும் சொல்லவில்லை.

  மாட்டுப் பொங்கல் தினத்தன்று, நண்பர் வீட்டிற்கு இலை வாங்குவதற்காக பாலாஜி சென்றுள்ளார். அப்போது அவரைக் கண்ட சிறுமி பயந்து கை, கால்கள் பதறித் துடிக்க, அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டுள்ளார். சந்தேகமடைந்த சிறுமியின் தாய், பாலாஜி சென்றபின் மகளிடம் ஏன் பாலாஜியைப் பார்த்து பயந்தாய் எனக் கேட்டுள்ளார்.

  அப்போதுதான் சிறுமி, பாலாஜியின் பாலியல் தொந்தரவு குறித்து கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியின் வாக்குமூலத்தை செல்போனில் பதிவு செய்து, அதன் அடிப்படையில் காரைக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் பாலாஜி வீட்டிற்குள் புகுந்து அவரைத் தாக்க முயன்றுள்ளனர்.

  இதையடுத்து தானே கணவரை போலீசில் ஒப்படைப்பதாக கூறிய சத்யா, அதன்படி அவரை ஒரு அறையில் அடைத்து வைத்தார். போலீசார் வந்த பின் கணவரை போலீசாரிடம் ஒப்படைத்தார்; அப்போது இனி தனக்கும் கணவருக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று பலர் முன்னிலையில் கூறினார்.

  புகாரின் அடிப்படையில் பாலாஜியைக் கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். நண்பனின் மகள் என்றும், சிறுமி என்றும் பாராமல் 7 வயது சிறுமியிடம் பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி காவல்துறை ஊழியரே பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  மேலும் படிக்க...தரமற்ற தங்க நாணயம் பரிசா?- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சர்ச்சை
  .  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: