ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீட் போன்ற தேர்வுகள் வேண்டாம் என்றால் 10, 12ம் வகுப்பு தேர்வுகளை கூட ஒழித்து விடலாம்: வானதி சீனிவாசன்

நீட் போன்ற தேர்வுகள் வேண்டாம் என்றால் 10, 12ம் வகுப்பு தேர்வுகளை கூட ஒழித்து விடலாம்: வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

நீட் போன்ற போட்டித்தேர்வுகள் வேண்டாம் என்றால் 10, 12ம் வகுப்பு தேர்வுகளை கூட ஒழித்து விடலாம் என கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவனுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, 12ஆம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கூறி, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் நீட் விலக்கு சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

  இதனை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. அதை நிறைவேற்றும் வகையில் மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மாணவர் சேர்க்கையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை எனும் முழுமையான சட்ட முன்வடிவை முன்மொழிவதாக கூறினார்.

  மேலும், பல இடங்களில் மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வரும் இந்த நிலையில் அதை தடுக்க நீட் தேர்வுக்கு எதிரான இந்த சட்ட முன்வடிவை அனைத்து கட்சியினரும் ஒருமனதாக நிறைவேற்றி தரவேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார்.

  தொடர்ந்து, தமிழக அரசு கொண்டு வந்துள்ள நீட் விலக்கு சட்ட முன்வடிவை வரவேற்பதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக சார்பில் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சித்திரை செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். எனினும், நீட் விலக்கு சட்ட முன்வடிவை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தது. இதையடுத்து, முதலமைச்சர் கொண்டுவந்த நீட் விலக்கு சட்ட முன்வடிவு ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.

  Also read: பின்னணியில் ’கவுண்டிங் மிஷின்’.. புகைப்படம் கிளப்பிய சர்ச்சை.. வானதி சீனிவாசன் விளக்கம்!!

  இந்நிலையில், நீட் போன்ற தேர்வுகள் வேண்டாம் என்றால் 10, 12ம் வகுப்பு தேர்வுகளை கூட ஒழித்து விடலாம் என கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக வானிதி சீனிவாசன் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், போட்டித் தேர்வுகளே கூடாது என்றால் காவலர் பணிக்கான தேர்வு, ஆசிரியர் பணிக்கான தேர்வு, வங்கி தேர்வு என்று பல்வேறு தேர்வுகளை எழுதி தான் ஒரு குறிப்பிட்ட துறைக்கு வேலைக்கு செல்கிறார்கள்.

  தேர்வு வேண்டாம் என்றால் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகளை கூட ஒழித்து விடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: BJP, Vanathi srinivasan