கலைஞர் இருந்திருந்தால் முதல்வரின் பணியை பார்த்து கண்ணீர் விட்டு இருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன் என பேரவையில் துரைமுருகன் உருக்கமாக பேசினார்.
துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய உலக எக்ஸ்போ கண்காட்சி வரும் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் மார்ச் 25ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படவுள்ளது. இதையொட்டி, உலக எக்ஸ்போ கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் செல்கிறார்.
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த நிகழ்வானது, ஆறு மாத காலங்களுக்கு நடைபெறும். துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய (MEASA) பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி ஆகும்.
இந்த உலகக் கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில், மார்ச் 25, 2022 முதல் மார்ச் 31, 2022 வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் உலகக் கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை மார்ச் மாதம் 25ஆம் தேதி திறந்து வைக்கிறார். தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப்படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்படவுள்ளன.
மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவனே உறவு கொண்டாலும், அது பாலியல் வன்கொடுமையே: கர்நாடக உயர்நீதிமன்றம்
மாபெரும் கண்காட்சியை சுமார் 2.50 கோடி பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் இந்த துபாய் மற்றும் அபுதாபி பயணத்தின் போது தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களுடனான சந்திப்பு, துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவர்களுடனான சந்திப்பு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதல்வரின் துபாய் பயணம் வெற்றி பெற சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் துறைமுருகன் வாழ்த்து தெரிவித்து அவருக்கு பொன்னாடை போத்தினார்.
இதுதொடர்பாக பேரவையில் அவர் பேசியதாவது, நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாட்டில் இருக்கும் செல்வந்தர்கள், தொழிலதிபர்களை ஈர்ப்பதற்கு தானே முன்வந்து, ஆயிரம் வேலைகள் இருக்கும்போதும் அவரே அடியெடுத்து கடல்கடந்து இன்றைய தினம் துபாய்க்கு செல்கிறார். அங்கு பல்வேறு தொழிலதிபர்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட உள்ளார்.
முதலமைச்சரே பலநாட்டு சர்வதேசர்கள் கூடுகின்ற துபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார் என்றால், அது உலக செய்தி ஆகும். அதனால், உலகின் பல்வேறு பகுதிகளில் இருப்பவர்களையும் தமிழகம் ஈர்க்கும். பலர் தமிழகம் வருவார்கள். இதன் மூலம் தமிழகத்தை கல்வியில், சுகாதாரத்தில், ஏழ்மையில் இருந்து விடுபடுத்துவது, தொழில்துறையில் முன்னேற்றுவது என்று எல்லா துறையிலும் இந்த 10 மாத காலத்தில் 100 ஆண்டுகால அனுபவத்தோடு செய்வதை போல செய்திருக்கிறார். அவரை நான் மனதார பாராட்டுகிறேன்.
இப்போது தலைவர் கலைஞர் மட்டும் இருந்திருந்தால் முதல்வரின் பணியை பார்த்து கண்ணீரை வடித்திருப்பார். மற்றவர்கள் பார்ப்பதற்கு முன்பு அந்த கண்ணீரை அவர் துணியால் துடைக்கும் காட்சியை நான் நினைத்து பார்க்கிறேன்.
இங்குள்ள அனைவரின் சார்பிலும் முதல்வரின் பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நீங்கள் இந்தியா மட்டுமல்ல உலக புகழ்பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்றார். தொடர்ந்து, அனைவரின் சார்பாக அமைச்சர் துரைமுருகன் முதல்வருக்கு பொன்னாடை போத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Durai murugan, MK Stalin, TN Assembly