Home /News /tamil-nadu /

கோடநாடு வழக்கில் தவறில்லை என்றால், பழனிசாமி பயப்படத் தேவையில்லை - டிடிவி தினகரன்

கோடநாடு வழக்கில் தவறில்லை என்றால், பழனிசாமி பயப்படத் தேவையில்லை - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

நதியினில் வெள்ளம்.... ஓ.பி.எஸ் கருத்து குறித்து எனக்கு தெரியாது. எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியவில்லை.

    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்றால் எடப்பாடி பழனிாசமி பயப்பட தேவையில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    திருச்சி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் எம்.ராஜசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்கஅமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்  வருகை தந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

    நதியினில் வெள்ளம்.... ஓ.பி.எஸ் கருத்து குறித்து எனக்கு தெரியாது. எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியவில்லை. அவரிடம் தான் கேட்க வேண்டும். திருந்தி வந்தால் பரதனாக ஏற்றுக் கொள்வோம் என்று முன்பு கூறினேன். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. கோடநாடு கொலை வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி பயப்பட வேண்டிய அவசியமில்லை. மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்று தெரிவித்தார்.

    Also Read : குணமடைந்து இன்று வீடு செல்ல இருந்த நிலையில் சோகம்.. ஓபிஎஸ் மனைவி இறப்பு குறித்து மருத்துவமனை விளக்கம்

    ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்புது தேவையற்றது. அதை தொடர்வது தான் பெருந்தன்மையான அரசாக இருக்கும். இதை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. சசிகலா தொண்டர்களை சந்திப்பார். அவர் வரும் போது, அவருடைய திட்டம் குறித்து அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: ADMK, TTV Dinakaran

    அடுத்த செய்தி