அரசு பேருந்து ஒரு கி.மீ ஓடினால் தமிழக அரசுக்கு ரூ.59.15 நஷ்டம்: நிதியமைச்சர் பி.டி.ஆர்.

அரசு பேருந்து ஒரு கி.மீ ஓடினால் தமிழக அரசுக்கு ரூ.59.15 நஷ்டம் ஏற்பட்டுள்ளது என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெயிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்து ஒரு கி.மீ ஓடினால் தமிழக அரசுக்கு ரூ.59.15 நஷ்டம் ஏற்பட்டுள்ளது என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெயிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  இதுதொடர்பாக வெள்ளை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், இன்றைய நிலவரப்படி, மாநிலத்தின் அனைத்து போக்குவரத்து நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் இயக்கச் செலவு கிலோமீட்டர் ஒன்றிற்கு ரூ.96.75 ஆக கணக்கடப்படுகிறது.

  ஆனால், மாநில போக்குவரத்து நிறுனங்களின் கட்டண வசூல் கி.மீ ஒன்றுக்கு ரூ.37.60 இருப்பதால் இயக்கப்பட்ட கி.மீ ஒன்றுக்கு ரூ.59.15 இழப்பு ஏற்படுகிறது.

  Also read: அதிமுக அரசு வட்டி கட்டுவதற்கும் கடன் வாங்கியிருக்கிறது - பழனிவேல் தியாகராஜன்

  இந்த இழப்பின் ஒரு பகுதியானது, அரசால் வழங்கப்படும் டீசல் மற்றும் மாணவர்களுக்கான பேருந்து பயணச் சலுகைக்கான மானியங்களால் ஈடு செய்யப்பட்டு வருகிறது.

  டீசல் விலைகளில் அடிக்கடி ஏற்படும் விலை உயர்விற்கு இணக்கமான அளவில் கட்டண உயர்வு இல்லாததால், மாநில போக்குவரத்து நிறுவனங்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  2011 - 12ம் ஆண்டில் போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டுமொத்த இழப்பு ரூ.8761.60 கோடியாக இருந்தது. 2020 -21ம் ஆண்டில் ரூ.42143.69 கோடியா உயர்ந்துள்ளது.

  மேலும், போக்குவரத்து துறையில் ரூ.1 வருமானம் வந்தால், ரூ.2 செலவு ஆகிறது, ரூ.1.50 ஓய்வூதியத்திற்கு செல்கிறது.

  பேருந்து சேவைகளின் தரம் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. 2011 -12ம் ஆண்டில் 21,197 ஆக இருந்த பேருந்துகளின் எண்ணிக்கை, 2020-21ம் ஆண்டில் 20,670 பேருந்துகளாக குறைந்துள்ளது.

  இதனால், போக்குவரத்தின் பல்வேறு வகைகளில், பொதுப் போக்குரவத்தின் பங்கு குறைந்துள்ளதை காட்டுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Esakki Raja
  First published: