தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அதன் எம்.எல்.ஏக்களைப் பார்த்து மக்கள் பயப்படும் சூழல் வரும்- அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து பயப்படும் நிலை ஏற்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அதன் எம்.எல்.ஏக்களைப் பார்த்து மக்கள் பயப்படும் சூழல் வரும்- அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
  • Share this:
சென்னை ராயபுரம் மண்டல அலுவலகத்தில் தொலைபேசி மூலம் மக்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையத்தை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், சென்னையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது நல்ல விஷயம்.

தொற்று காற்றில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் சில ஆராய்ச்சிகள் நடத்தி வருகிறது. ஆனால், அது குறித்த தெளிவான விளக்கம் இதுவரை தரப்படவில்லை. காற்றில் பரவுகிறதோ இல்லையோ பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியைப் பின்பற்றியும் வந்தால் தொற்று பரவாமல் தடுக்கலாம் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக என்பதே ஒரு வன்முறைக் கட்சி. நில அபகரிப்பு அனைத்துமே திமுக ஆட்சியில்தான் செய்யப்பட்டது. ஏழைகளின் நிலங்களுமே திமுக காலத்தில் அபகரிக்கப்பட்டது எனக் குற்றம் சாட்டினார். துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு திமுக சென்றுவிட்டது. ஆட்சியில் இல்லாதபோதே இந்த நிலைமை என்றால் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரிடமும் துப்பாக்கி இருக்கும். மக்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து மக்கள் பயப்படும் நிலை ஏற்படும் என்றார்.


மேலும், துப்பாக்கி இருக்கிறது என்பதற்காக எதற்கு வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் சுடலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அமைச்சர், சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. அதிமுகவினர் யாரிடமும் கள்ளத் துப்பாக்கி இல்லை. என்னிடம் உரிமத்துடன் இரண்டு துப்பாக்கிகள் உள்ளன. ஆனால் நான் இதுவரை அதைப் பயன்படுத்தியது இல்லை என்றார்.

Also see:
அதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போது தனது கைபேசியில் இருந்து மதுரை திமுக சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி காலனி காட்டி மிரட்டும் காட்சிகளைக் காண்பித்து மோசடி கட்சி திமுக எனச் சாடினார்.

கொரோனாவால் சீனாவில் இருந்து சில நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன. அந்த வாய்ப்பை தமிழக அரசு பயன்படுத்திக் கொண்டுள்ளது. சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் சில  தமிழகத்தில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளன. அதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது என்றார்.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading