ரஜினி கேட்டுக் கொண்டால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டி.. தேர்தல் பிரசாரத்தில் கமல் அதிரடி அறிவிப்பு..

ரஜினி கேட்டுக் கொண்டால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டி.. தேர்தல் பிரசாரத்தில் கமல் அதிரடி அறிவிப்பு..

நடிகர் கமல்ஹாசன்

ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டால் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன், காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தை பார்வையிட்டார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினியோடு கூட்டணிக்கு தயார் என கூறிய பிறகு பிரச்சார வேலைகளை தொடங்கிவிட்டதால் ரஜினியுடன் பேசவில்லை என கூறினார். எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி டார்ச் சின்னம் வேண்டாம் என கூறியுள்ள நிலையில் மீண்டும் சின்னத்தை பெற சட்டப் போரட்டம் நடத்துவோம் என அவர் குறிப்பிட்டார். மக்களை வறுமை கோட்டிற்கு மேல் அல்லாமல், செழுமை கோட்டிற்கு மேல் வைப்பதே தங்கள் நோக்கம் எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

ரஜினியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், முதல்வர் வேட்பாளராக களம் இறங்குவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ரஜினி கேட்டுக் கொண்டால் மறுப்பதற்கில்லை எனவும் கூறினார். தான் பகுத்தறிவாளன் எனவும், யாரோடும் உரையாடுவதில் தமக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிர நகரங்களில் இன்று முதல் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு...

இதனை தொடர்ந்து, பிள்ளையார் பாளையம், கீழ் அம்பி உள்ளிட்ட பகுதிகளில் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை முடித்த கமல்ஹாசன், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு சென்றார். அங்கு மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தி கமலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: