• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் படகு மூலம் ஆவின் பால் வினியோகம்- அமைச்சர்

தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் படகு மூலம் ஆவின் பால் வினியோகம்- அமைச்சர்

ஆவின் பால்

ஆவின் பால்

சென்னை மற்றும் சென்னை புறநகரில் 12 லட்சத்து 20 ஆயிரம் ஆவின் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம்போல் தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்கும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

  • Share this:
    கடந்த முறை ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் அதிமுக அரசின் அலட்சியத்தால் ஆவின் பால் லிட்டருக்கு 200 வரை விற்பனை செய்யப்பட்டதாகவும். இந்த முறை அது போன்ற நிலை ஏற்படாது எனவும், தண்ணீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் படகு மூலம் ஆவின் பால் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பால்வளத் துறை அமைச்சர் சாமு.நாசர் தெரிவித்தார்.

    சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பதனம் செய்து பேக்கிங் செய்யும் தொழிற்சாலையில் தமிழக பால் வளதுறை அமைச்சர் சாமு.நாசர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி IAS அவர்கள் நேரில் சென்று பால் விநியோகம் செய்வதை நேரில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர். தமிழகம் முழுவதும் பெய்து வரும் வட கிழக்கு பருவமழையின் காரணமாக  சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

    இந்நிலையில் அம்பத்தூர் சோழிங்கநல்லூர் மாதவரம் காக்களூர் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதி உள்ள ஆவின் தொழிற்சாலைகள் இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்பட்டு முறையாக பால் கொள்முதல் செய்யப்பட்டு அதை பதனிட்டு வினியோகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்

    இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்


    கடந்த முறை ஆட்சியாளர்களின் கவனக்குறைவால் பால் லிட்டருக்கு 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும்  இந்த முறை அது போன்ற நிலை மக்களுக்கு ஏற்படாது எனவும் சென்னை மற்றும் சென்னை புறநகரில் 12 லட்சத்து 20 ஆயிரம் ஆவின் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம்போல் தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்கும் எனவும் உறுதி அளித்தார்.

    தண்ணீர் தேங்கி உள்ள தாழ்வான பகுதிகளில் படகுகள் மூலம் சென்று ஆவின் பால் வினியோகம் செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

    மேலும் படிக்க: கந்த சஷ்டி திருவிழா: சூரசம்ஹாரம்- முருகன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: