Home /News /tamil-nadu /

ரஜினிகாந்தைப் பற்றி பேச ரூ.5 லட்சம் அக்கவுண்டில் போடுங்கள் - சரத்குமார்

ரஜினிகாந்தைப் பற்றி பேச ரூ.5 லட்சம் அக்கவுண்டில் போடுங்கள் - சரத்குமார்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

"குடியுரிமை சட்ட திருத்தத்தால் எந்த பாதிப்பும் இல்லை"

    நடிகர் ரஜினியை பற்றி பேச வேண்டும் என்றால் 5 லட்சம் ரூபாய் என் அக்கவுண்டில் போடுங்கள் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

    தேனி மாவட்டம் தேவாரத்தில் தனது கட்சி பிரமுகர் ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ”குடியுரிமை திருத்த சட்டத்தால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அதில் உள்ள சாராம்சங்களை முழுமையாக படிக்க வேண்டும். இதனால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் களத்தில் இறங்கி போராட தயாராக உள்ளேன்.

    தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் மூன்று அம்சங்களில் திருத்தம் செய்யக்கோரி, மத்திய அரசுக்கு முதல்வர் எழுதிய கடிதத்திற்கு உரிய பதில் கிடைக்காததால், அப்பணி ஜூன் 16க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழி நடத்த கூடாது” என்றார்.

    மேலும் ரஜினி குறித்து கேள்வி எழுப்பிய போது “ யார் வேண்டுமானாலும் கட்சி துவக்கலாம். நடிகர் ரஜினியை பற்றி பேச வேண்டும் என்றால் 5 லட்சம் ரூபாய் என் அக்கவுண்டில் போடுங்கள்” என்று கூறினார்.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube





     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Rajini Kanth, Sarathkumar

    அடுத்த செய்தி