ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன் - கு.க. செல்வம்

பாஜக-வில் இணைவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன் என கு.க. செல்வம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தெளிவாக இல்லை என்றும் மேலும் குற்றச்சாட்டு மீதான விசாரணைக்கு நேரில் வர தயார் என குறிப்பிட்டபோதும் எந்த விசாரணையும் இன்றி தன்னை கட்சியில் இருந்து நீக்கியிருப்பது ஜனநாயக படுகொலை என குறிபிட்டார். ஏற்கனவே ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் மக்கள் தனக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்தார்கள் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு தனக்கு உள்ளது என்றார்.

தன்மீதான துரைமுருகன் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கு.க.செல்வம், துரை முருகனை சிலர் பேச வைப்பதாகவும் அவர் இரட்டை நிலைபாடு கொண்டவராக இருப்பதாகவும் குறிபிட்டார். திமுக மூத்த நிர்வாகிகள் பலர் கட்சி மீது ஆத்திரத்தில் இருப்பதாகவும் விரைவில் திமுக-வில் இருந்து பலர் வெளியேறுவார்கள் என குறிபிட்டார். 

தற்போது வரை தான் எந்த கட்சியிலும் சேரவில்லை என குறிபிட்ட அவர் பாஜக-வில் இணைவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும்  ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடப்போவதாகவும் அவர் குறிபிட்டார்.மேலும் தன்னுடைய விவகாரத்திற்கு  உதயநிதி ஸ்டாலின் தலையீடுதான் காரணம் எனவும் கு.க.செல்வம் குற்றம் சாட்டினார்.. நாட்டின் பல மாநிலங்களிலும், மத்தியிலும் ஆட்சி செய்யும் பாஜக தமிழகத்தில் ஆட்சியமைக்கவேண்டும் என நினைப்பது இயல்பு எனவும் அவர் குறிபிட்டார் .
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading