• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மத்திய அரசிடம் இருந்து அண்ணாமலை ரூ.5000 வாங்கி கொடுத்தால், மக்களிடம் கொடுத்து விடுவோம்: மா.சுப்பிரமணியன்

மத்திய அரசிடம் இருந்து அண்ணாமலை ரூ.5000 வாங்கி கொடுத்தால், மக்களிடம் கொடுத்து விடுவோம்: மா.சுப்பிரமணியன்

மத்திய அரசிடம் இருந்து அண்ணாமலை ரூ.5000 வாங்கி கொடுத்தால், வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு கொடுத்து விடுவோம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சென்னை வேளச்சேரியில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.நகரில் உள்ள பள்ளியில் மழை நீரில் கழிவு நீரும் தேங்கியுள்ளது குறித்த கேள்விக்கு, உடனடியாக மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையரிடம் முறையிட்டு பள்ளியில் உள்ள மழைநீர் மற்றும் கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    தொடர்ந்து, வருகின்ற 18ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, தமிழக முதல்வர் மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறைக்கும் முன்னெச்சரிக்கையாக செய்யப்பட வேண்டிய பணிகளை தெரிவித்திருக்கிறார். மாநகராட்சி நிர்வாகம் அனைத்து இடங்களிலும் மோட்டார் இயந்திரங்கள் மூலமும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேவையான மருந்துகள் பல்வேறு வசதிகளுடன் தயாராக உள்ளது என்றார்.

    வெள்ள பாதிப்பு குறித்த நிதி அறிக்கையை மத்திய அரசிடம் எப்போது அளிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, டெல்டா பகுதிகளில் பாதிக்கப்பட்டது குறித்து தமிழக முதல்வரிடம் இன்று ஓப்படைக்கப்பட்டுள்ளது. வருகின்ற மழையின் பாதிப்பையும் கணக்கீடு செய்து ஒன்றிய அரசிடம் தேவையான நிதிக்கு அறிக்கை அளிக்கப்படும் என்றார்.

    பின்னர், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5000 ரூபாய் வழங்க வேண்டி தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் வருகின்ற 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது குறித்த கேள்விக்கு, மத்திய அரசிடம் இருந்து தமிழக பாஜாக தலைவர் அண்ணாமலை 5000 ரூபாய் வாங்கி கொடுத்தால், அதை மக்களிடம் கொடுத்து விடுவோம் என்றும், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை கணக்கீடு செய்து வைத்திருக்கிறோம். அதை தருகிறோம் என்றும் தெரிவித்தார்.

    தொடர்ந்து, மழைநீரில் அதிக அளவு கழிவு நீர் கலப்பது குறித்து கேட்டாபோது, மழைநீர் அதிகமாக இருக்கும் பொழுது கழிவு நீர் கால்வாய் திறப்பதினால் ஏற்படும் பாதிப்பு இது என்றும், மழை நின்றவுடன் இந்த பாதிப்பும் சரியாகி விடும் என்றும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: