தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் பொங்கல் பரிசாக ரூ. 5ஆயிரம் வழங்கபடும்: அதிமுக எம்எல்ஏ

மோகன் எம்.எல்.ஏ

சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார் பொங்கல் பரிசாக 2,500 -ல் இருந்து 5ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கபடும். இல்லையென்றால் பெண்கள் என் சட்டையை பிடித்து கேட்கலாம்.

 • Share this:
  வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் மீண்டும் பொங்கல் பரிசாக 5ஆயிரம் ரூபாய் நிச்சியமாக வழங்கபடும் என்னை சட்டை பிடித்து கேட்கலாம் என்று அதிமுக செய்யார் எம்.எல்.ஏ தூசி மோகன் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டது.

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணாசிலை அருகில் அதிமுக சார்பில் நடைபெற்ற மொழி போர் தியாகி பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

  இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு இந்த கூட்டத்தில் ஓரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தபட்டது.

  மேலும்படிக்க... பேரணி.. கண்ணீர் புகை குண்டு.. தடியடி.. 144 தடை... தலைநகரை திணறடித்த விவசாயிகள் போராட்டம்

  அதனைத் தொடர்ந்து, செய்யார் எம்.எல்.ஏ தூசி மோகன் பேசுகையில், அம்மாவின் (ஜெயலலதாவின்) கனவு திட்டமான மகளிர் குழு திட்டம் 5ஆயிரம் ரூபாய் மகளிர் குழுவிற்கு கடன் கொடுத்து தற்போது 50லட்சம் வரையில் மகளிர் திட்டம் மூலம் கடனை வழங்கபட்டு வருகின்றன.

  பொங்கல் பரிசாக 2500ரூபாய் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கபட்டன. வருகின்றன சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார் பொங்கல் பரிசாக 2,500 -ல் இருந்து 5ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கபடும். இல்லையென்றால் பெண்கள் என் சட்டையை பிடித்து கேட்கலாம்” என்றார்.
  Published by:Suresh V
  First published: