சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைக்கடத்தல் வழக்குகளையும் சிபிஐ வசம் மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதற்கிடையே, ஓய்வு பெற்ற அதிகாரி பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சிபிஐ வசம் வழக்குகளை மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தது.
மேலும், பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக தொடர எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.