முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஐசிசி ரேங்கிங்ஸ்: கோலி 7ம் இடத்துக்கு சரிவு- லபுஷேன் நம்பர் 1, பாபர் ஆஸம் டி20 நம்பர் 1

ஐசிசி ரேங்கிங்ஸ்: கோலி 7ம் இடத்துக்கு சரிவு- லபுஷேன் நம்பர் 1, பாபர் ஆஸம் டி20 நம்பர் 1

  • 1-MIN READ
  • Last Updated :

    டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 7ம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

    விராட் கோலி நல்ல இன்னிங்ஸ் ஒன்றை ஆடி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. லபுஷேன் ஆடிக்கொண்டே இருக்கிறார். ஜோ ரூட் ஆடிக்கொண்டே இருக்கிறார். பேட்ஸ்மேன் தரவரிசையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்டில் சதம் (103 ரன்கள்) மற்றும் அரைசதம் (51 ரன்கள்) விளாசிய ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் (912 புள்ளி) ஒரு இடம் முன்னேறி முதல்முறையாக நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

    அவர் ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பாக 4-வது இடத்தில் இருந்தார். முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (897 புள்ளி) 2-வது இடத்துக்கு பின்னடைந்தார்.

    ஆஸ்திரேலிய அணியின் துணைகேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 884 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 879 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 797 புள்ளிகளுடன்5-வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 775 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், இந்திய கேப்டன் விராட்கோலி 756 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    ஐசிசி பவுலர்கள் தரவரிசையில் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதலிடம், இந்தியாவின் அஸ்வின் 883 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி (822 புள்ளி) 3ம் இடத்தில் தொடர்கிறார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 814 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 810 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

    அடிலெய்டு டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 4 இடம் உயர்ந்து 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

    அதே போல் டி20 போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் கடந்த வாரம் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (805 புள்ளி) வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் 79 ரன்கள் எடுத்ததன் மூலம் இங்கிலாந்து வீரர் டேவிட் மலானுடன் (805 புள்ளி) முதலிடத்தை பகிர்ந்துள்ளார். முகமது ரிஸ்வான் 3ம் இடத்தில் இருக்கிறார்.

    Also Read: IPL 2022| ஐபிஎல் 2022 மெகா ஏலம் தள்ளி வைப்பு- டிசம்பரில் இல்லை- எப்போது?

     தென்ஆப்பிரிக்காவின் மார்க்ராம் 796 புள்ளிகளுடன் 2 இடம் இறங்கி 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 729 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் நீடிக்கிறார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் டாப்-10 இடங்களில் இந்திய பவுலர்கள் யாரும் இடம் பிடிக்கவில்லை.

    First published: