நாமக்கல், நாகை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

தமிழக அரசு

  • Last Updated :
  • Share this:
நாமக்கல், நாகை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆசியா மரியம் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக மேகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று நாகை மாவட்ட ஆட்சியராக பிரவீன் கே. நாயர், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக விஜயகார்த்தியேகன் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களான திருப்பத்தூரின் சிறப்பு அதிகாரியாக சிவனருள், ராணிப்பேட்டையின் சிறப்பு அதிகாரியாக திவ்யதர்ஷினி ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Watch Also:
Published by:Yuvaraj V
First published: