தூர்வாரும் பணிகளைக் கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமணம்!

தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 392 பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தூர்வாரும் பணிகளைக் கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமணம்!
தலைமைச் செயலகம் (கோப்புப்படம்)
  • Share this:
காவிரி டெல்டா மாவட்ட பகுதிகளில் மேற்கொள்ளவுள்ள தூர்வாரும் பணிகளை கண்காணிப்பதற்காக சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.67 கோடியே 24 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 392 பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை கண்காணிப்பதற்காகவும், அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும், மாவட்ட வாரியாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


அதன்படி தஞ்சை மாவட்டத்துக்கு ககன் தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ், திருவாரூர் மாவட்டத்துக்கு ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ்,
நாகை மாவட்டத்துக்கு சந்திரமோகன் ஐ.ஏ.எஸ், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அபூர்வா ஐ.ஏ.எஸ், கரூர் மாவட்டத்துக்கு கோபால் ஐ.ஏ.எஸ், திருச்சி மாவட்டத்துக்கு கார்த்திக் ஐ.ஏ.எஸ்,
அரியலூர் மாவட்டத்துக்கு விஜய்ராஜ் குமார் ஐ.ஏ.எஸ் உள்ளிட்டோர்  சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த அதிகாரிகள் அனைவரும் உடனடியாக தங்கள் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு அதிகாரிகள் தங்கள் பணிகள் தொடர்பான அறிக்கையை தலைமைச் செயலாளருக்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும் சமர்பிக்க அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுப்படிக்காக தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், ஆறுகள், வடிகால்களை தூர்வாரி தயார் நிலையில் வைத்திருக்கும் பொருட்டு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம். 

Also see:
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading