அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்

அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்

சகாயம் ஐஏஎஸ்

சகாயம் ஐஏஎஸ்-க்கு கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அரசு முக்கிய பதவிகளை வழங்கவில்லை எனவும் இதனால் அவர் கடும் மனஉளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

  • Share this:
    விருப்ப ஓய்வு அளிக்குமாறு கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி விண்ணபித்திருந்தார் ஐ.எ.ஏஸ். அதிகாரி சகாயம். ஜனவரி 2-ம் தேதி இவரது அவகாசம் முடிவடைந்த நிலையில் முறைப்படி அரசு பணியிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டார். சகாயம் நடத்தி வரும் மக்கள் பாதை அமைப்பை அரசியலில் ஈடுபடுத்த திட்டம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    புதுக்கோட்டையை சேர்ந்த சகாயம், முதலில் தமிழக அரசின் சிறிய துறைகளில் பணியாற்றி, பின்னர் பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் பணிக்கு தேர்வானவர். இவர் கடைசியாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றி வந்தார்.

    சகாயம் ஐஏஎஸ்-க்கு கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அரசு முக்கிய பதவிகளை வழங்கவில்லை எனவும் இதனால் அவர் கடும் மனஉளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சகாயம் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி விருப்ப ஓய்வுக்கோரி விண்ணப்பித்திருந்தார். இவரது பணி காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன.

    இந்நிலையில் விருப்ப ஓய்வுக்கோரி விண்ணப்பித்த சகாயத்தின் அவகாசம் ஜனவரி 2-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இன்று முறைப்படி அவர் அரசுப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.  சகாயம் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, கிரானைட் ஊழலை வெட்ட வெளிச்சமாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சகாயம் ஐஏஎஸ் என்றால், லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து என்ற வாசகம் தான் நினைவுக்கு வரும். அவரின் நேர்மையின்பால் ஈர்த்து இளைஞர்கள் பலர், அவருடைய வழிகாட்டலில் இயங்க இயக்கமாக செயல்பட்டு வருகிறார்கள். இடையில், சகாயம் ஐஏஎஸ் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர்.
    Published by:Vijay R
    First published: