நீங்கள் தமிழ் சினிமாவில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு எனக்கு நடிக்க தெரியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் கொடுத்தார். அதில் தமிழ்நாட்டில் ஏன் இன்னும் பாஜக ஒரு பெரிய இடத்திற்கு வரவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வளவு நாட்களும் அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா, இப்படி பெரிய ஆளுமைகள் இருந்ததால், எதுவும் செய்யமுடியவில்லை. இவர்களை எதிர்த்து யாராலும் ஆட்சி செய்யவே முடியாது என்று இருக்கும் சூழலில் பாஜக மட்டும் எப்படி மேலே வரமுடியும். அதனால் தான் வரமுடியவில்லை, ஆனால் தற்போது மக்களோடு ஒன்றிணையும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக vs அதிமுக, மட்டும் தான் இருக்கையில் பாஜக Vs என்று வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்களும் உங்கள் பங்காளி தான், மூவரும் ஒன்றாக பங்காளி சண்டை போடலாம் என கூறினார்.
அதிமுக கூட்டணியா, பாஜக கூட்டணியா எது பெரிய கட்சி என்ற கேள்விக்கு, அதிமுக தான் பெரிய கட்சி, கருத்தியலில் திமுகவுக்கும் தங்களுக்கும் போட்டி வருகிறது. ஆனால், கட்சியை பொறுத்தவரை அதிமுகவே பெரிய கட்சி என தெரிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலில் நீங்கள் களமிறங்குவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் நிற்க தனக்கு விருப்பமில்லை என்றும், 2026ஆம் ஆண்டு பாஜகவை தமிழகத்தில் கொண்டு வருவது தான் எனது இலக்கு. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இப்படி ஒரு சூழ்நிலையில் 2026க்கும் எப்படி பாஜக தமிழகத்தில் வரும் என்ற கேள்விக்கு நம்பிக்கை தான் எல்லாம், மக்கள் நம்பினால் ஒரே இரவில் அனைத்தும் மாறிவிடும் என கூறினார்.
அலுவல் மொழி 100 சதவீதம் வந்துவிட்டால் பாஜக எதிர்க்குமா ஆதரிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அமித்ஷா அப்படி கூறவில்லை. தவறாக புரிந்து விட்டார்கள். தமிழை வளர்ப்போம் கண்டிப்பாக என கூறியுள்ளார்.
இளைஞர்களுக்கு உங்களுக்கான அறிவுரை என்ற கேள்விக்கு, அதிகமாக போன் யூஸ் பண்ண வேண்டாம், போதை பொருளுக்கு அடிமையாக வேண்டாம் என அட்வைஸ் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து, நீங்கள் தமிழனா கன்னடனா என்ற கேள்விக்கு, முதலில் இந்தியன், 2வது தமிழன், 3வது இந்தியாவில் எங்கெல்லாம் பயணித்தேனோ அதை சொல்வேன் என கூறினார்.
நீங்கள் சமீபத்தில் கவனிக்க கூடிய தலைவர்கள் என்றால் யார் என்ற கேள்விக்கு, சீமான், உதயநிதி ஸ்டாலின், ரவிக்குமார், அன்புமணி ராமதாஸ் இவர்களின் மாறுபட்ட கருத்துகளை பார்ப்பேன் எனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார்.
படம் பார்க்க நேரமுள்ளதா என்ற கேள்விக்கு காரில் நீண்ட தூரம் செல்லும் போது, விமானத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் போது பார்ப்பேன் என கூறினார்.
ஏற்கனவே ஒரு படம் நடித்துள்ளீர்கள் சினிமாவில் நடிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, வற்புறுத்தலின் பேரில் தான் அந்த படத்தில் நடித்தேன். சம்பளம் கூட ரூ.1 தான் வாங்கினேன். எனக்கு நடிக்க தெரியாது. சினிமாவில் வரமாட்டேன் என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, Interview, News18 Tamil Nadu