’இத்தனை நாளா என்னால ஜெயிக்க முடியும்னு தப்பா நினைச்சிட்டு இருந்தேன்’ என நீட் தேர்வு தோல்வி பயத்தால் அரசுப் பள்ளி மாணவன் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரதாப். அவரது மனைவி ஜெயந்தி இட்லி வியாபாரம் பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகனான தனுஷ் கடந்த 2020 ஆம் ஆண்டு அரசு பள்ளியில் 12ம் வகுப்பில் 489 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
கடந்த கல்வியாண்டில் நீட் தேர்வில் எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளார். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த தனுஷ் 159 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார். அவர் எடுத்த மதிப்பெண்ணிற்கு அரசு மருத்துவக் கல்லூரி கிடைக்காமல் போயுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க போதிய பணம் இல்லாத காரணத்தினால் மீண்டும் நீட் தேர்விற்காக பயிற்சி பெற ஆரம்பித்துள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயில வேண்டும் என்ற கனவோடு இரவு பகல் பாராமல் தனுஷ் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, தனுஷ் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது சகோதரரிடம் ஆங்கிலத்தில் அனைத்தும் இருப்பதால் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருப்பதாக கூறி வேதனை தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெல்ட் மூலமாக தூக்கிட்டு திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் தனுஷ் தற்கொலை செய்துகொள்ளும் முன் தனது மொபைலில் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாணவர் தனுஷ் தான் இறப்பதற்கு முன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், "இத்தன நாளா என்னால ஜெயிக்க முடியும்னு தப்பா நினைச்சிட்டு இருந்தேன். ஆனா என்னால முடியல.
நான் தப்பான பாதையை செல்க்ட் பண்ணிட்டனோ?
எனக்கு என்ன வரும்னு தெரியாம நானே ஒரு பொய்யான அறிவு வளத்துக்கிட்டேன். என் சாவுக்கு யாரும் காரணமில்லை.
நான் ரொம்ப டிப்ரெஸ்டடா இருக்கேன். நான் கெளம்புறேன்." என பேசியுள்ளார்.
நீட் தேர்வால் அடுத்தடுத்த தற்கொலை செய்து வரும் தமிழக மாணவர்களால் தமிழகமே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.