மு.க.ஸ்டாலின் எனது இல்லத்திற்கு வந்தால் வரவேற்பேன் - மு.க.அழகிரி

மு.க.ஸ்டாலினுடன் அழகிரி: பழைய புகைப்படம்

முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் மதுரையில் உள்ள தனது அண்ணன் மு.க.அழகிரியை சந்தித்து வாழ்த்து பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது

 • Share this:
  மு.க.ஸ்டாலின் எனது இல்லத்திற்கு வந்தால் வரவேற்பேன், ஸ்டாலின் எனது இல்லத்திற்கு வருவதாக எனக்கு தகவல் இல்லை என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளர்.

  மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் முதல்முறையாக மதுரை வந்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய ஸ்டாலின்,  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்  அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

  முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் மதுரையில் உள்ள தனது அண்ணன் மு.க.அழகிரியை சந்தித்து வாழ்த்து பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது,. மு.க.அழகிரி வீட்டிற்கு சந்திக்க டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள இல்லத்திற்கு ஸ்டாலின் வருகை தர உள்ளார் என தகவல் பரவியதை தொடர்ந்து அழகிரியின் ஆதரவாளர்கள் அவரது வீட்டிற்கு வர தொடங்கினர்.

  தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அழகிரியின் இல்லத்திற்கு வருகை தராததால் அழகிரி ஆதரவாளர்கள் ஏமாற்றத்துடன் சோகத்துடன் காணப்பட்டனர்.

  இது குறித்து தொலைபேசி வாயிலாக மு.க.அழகிரியிடம் பேசியபோது, தம்பி, அண்ணன் இல்லத்திற்கு வருவது இயல்பானது. ஸ்டாலின் எனது இல்லத்திற்கு வருகிறார் என்ற தகவல் எனக்கு கிடைக்கவில்லை. வீட்டிற்கு வந்தால் வரவேற்பேன் என்று அழகிரி தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தார்.

  மதுரை செய்தியாளர் வெங்கடேஷ்வரன்
  Published by:Arun
  First published: