உச்சிப்புளியில் விமான நிலையம் அமைக்கப்படும் - முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி

தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் மும்முரமாக வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உச்சிப்புளியில் விமான நிலையம் அமைக்கப்படும் - முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி
நவாஸ்கனி
  • News18
  • Last Updated: April 16, 2019, 3:14 PM IST
  • Share this:
உச்சிப்புளியில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி வாக்குறுதி அளித்தார்.

தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் மும்முரமாக வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக வின் கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் நவாஸ்கனி பிரச்சாரத்திற்கான கடைசி நாளான இன்று இராமநாதபுரம் நகர் பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.


அங்குள்ள மக்களை சந்தித்த அவர், என்னை வெற்றி பெற செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால் பாதுகாக்கப்பட்ட குடிநீர், குழந்தைகளுக்கு தரமான கல்வி, சுகாதார வசதி, சாலை வசதி, வறுமை ஒழிப்பு, தொழில்துறையில் பின் தங்கிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவேன் “என தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

அதன் பின் நியூஸ்18 தமிழ்நாடுக்கு பேட்டியளித்த அவர்: ”நான்  இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். நகர்பகுதிகளில் இருக்க கூடிய அனைத்து அடிப்படை பிரச்சனைகளையும் சரிசெய்வேன்.

உச்சிப்புளியில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்” என தெரிவித்தார்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்