சென்னை மாநகராட்சிக்கு இணையாக தாம்பரம் மாநகராட்சியின் தரத்தை உயர்த்துவேன் என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாம்பரம்
திமுக பெண் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள் பிரிக்கப்பட்டு முதல்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது.
இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெருவாரியான இடங்களைக் பிடித்து வெற்றிப்பெற்றன. இதனால் தாம்பரம் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவியை திமுகவே கைப்பற்றியது.
ஏற்கனவே தாம்பரம் மாநகராட்சியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.
ஒட்டுமொத்த அ.தி.மு.கவும் முடிவு செய்யட்டும்: அதன்பிறகு பதில்சொல்கிறேன்- டி.டி.வி.தினகரன் விளக்கம்
இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சி 32வது வார்டில் போட்டியிட்ட வசந்தகுமாரி என்பவர் தாம்பரம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதேபோல் துணை மேயராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகனின் உறவினரான ஜி.காமராஜ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் மேயராக அறிவிக்க்ப்பட்ட வசந்தகுமாரி திமுக முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
அப்போது அவர் நம்மிடம் கூறியதாவது, தமிழக முதல்வர் என்னை மேயாராக தேர்ந்தெடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் என்னை தேர்ந்தெடுத்த நோக்கத்தை நிச்சயமாக நிறைவேற்றுவேன்.
எங்கள் குடும்பம் 42 வருடமாக திமுகவில் உள்ளோம் தற்போது என்னை மேயராக அறிவித்தது எங்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம்.
தாம்பரம் மாநகராட்சி வளர்ச்சிக்காக எந்தந்த வளர்ச்சி பணிகள் தேவையோ அதை அனைத்தையும் செயல்படுத்துவேன். சென்னை மாநகராட்சிக்கு இணையாக தாம்பரம் மாநகராட்சியின் தரத்தை உயர்த்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.