ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விமானத்தில் இருக்கிறேன்.. ஆனால் எமெர்ஜென்ஸி எக்ஸிட்டை திறக்க மாட்டேன் - திமுக எம்பி தயாநிதி மாறன் வெளியிட்ட வீடியோ

விமானத்தில் இருக்கிறேன்.. ஆனால் எமெர்ஜென்ஸி எக்ஸிட்டை திறக்க மாட்டேன் - திமுக எம்பி தயாநிதி மாறன் வெளியிட்ட வீடியோ

தயாநிதி மாறன்

தயாநிதி மாறன்

கோயம்புத்தூர் செல்லும் விமானத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் வெளியிட்ட வீடியோ வைரல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திமுக எம்பி தயாநிதி மாறன் விமானத்தில் பயணிக்கும்போது எடுத்த வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் “நான் கோயம்புத்தூர் செல்ல இண்டிகோ விமானத்தில் எமர்ஜென்ஸி எக்ஸிட் அருகே தற்போது அமர்ந்திருக்கிறேன். ஆனால் நான் இந்த எமர்ஜென்ஸி எக்ஸிட்டை திறக்கபோவதில்லை. ஏனென்றால் அதை திறப்பது விமானத்திற்கும் விமான பயணிகளுக்கும் பாதுகாப்பானது அல்ல. மேலும் அப்படி திறக்காமல் இருப்பதால் அது நேரத்தை மிகவும் சேமிக்கும். அதுமட்டுமில்லாமல் நான் பிறகு மன்னிப்பு கடிதம் எழுதவேண்டியதில்லை என தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் தேஜஸ்வி சூர்யா மற்றும் அண்ணாமலை விமானத்தில் பயணிக்கும்போது எமர்ஜென்ஸி எக்ஸிட்டை திறந்ததால் மன்னிப்பு கேட்டதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா விளக்கம் அளித்த பிறகு தயாநிதி மாறன் இந்த வீடியோவை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Annamalai, Dayanidhi Maran, Dhayanidhi Maran, DMK