விரோதிகள் யார் என்பதை தேர்தலின் போது கூறுகிறேன் - கமல்ஹாசன்

news18
Updated: March 13, 2018, 3:25 PM IST
விரோதிகள் யார் என்பதை தேர்தலின் போது கூறுகிறேன் - கமல்ஹாசன்
கமல்ஹாசன்
news18
Updated: March 13, 2018, 3:25 PM IST
அரசியலில் எங்கள் விரோதிகள் யார் என்பதை தேர்தலின் போது கூறுகிறேன் என்று  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.  மேலும் ரஜினியை விமர்சிக்க மாட்டேன். ஆனால் அரசியல் ரீதியாக வேறுபட்டால் கட்சியின் கொள்கைகளை விமர்சிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி நடத்திய `உழவன் விருதுகள்’ கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈரோட்டில் நடைபெற்றது. இந்த விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். அதன்பிறகு நியூஸ் 18 தொலைக்காட்சியின் முதன்மை செய்தி ஆசிரியர் குணசேகரன் கமல்ஹாசனிடம் நேர்காணல் நடத்தினார்.

இந்த நேர்காணலில் கமல் பேசியதாவது: அதிமுக என்பது ஒரு கட்சி. அந்தக் கட்சி எப்போது வேண்டுமானாலும் மேம்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நான் தற்போது தமிழகத்தில் இருக்கும் அரசை மட்டுமே விமர்சிக்கிறேன்.

தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று நான் எங்கேயும் சொல்லவில்லை. வெற்றிடம் குறித்த கேள்விக்கு என்னால் பதில் சொல்லமுடியாது. அப்படி கூறினால் நியாயமாகவும் இருக்கமுடியாது.  பசித்த வயிறுகளை நிரப்ப வேண்டியிருக்கிறது. தரமான கல்வியை வழங்க வேண்டும்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற முனைப்போடு இருப்பவர்கள் அனைவருமே எனக்கு அரசியல் நண்பர்களேம்,  ஆனால் மக்கள் பணத்தை கொள்ளையடித்து, வியாபாரமாக்கும் அனைவருமே எனக்கு எதிரிகள். இடது, வலது என்று என்னால் பச்சை குத்தி கொள்ளமுடியாது. `சென்ட்ரிஸம்’ உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கின்றன.  விரைவில் அந்த அலை இந்தியாவில் பரவும்.

ரஜினியை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் அவரை விமர்சனம் செய்யமாட்டேன். ஆனால் கட்சிக் கொள்கைகளில் ஏதேனும் மாறுபட்ட கருத்துகள் இருந்தால் அவரை விமர்சிக்க தயங்க மாட்டேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்