ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஓசியில் நான் வரமாட்டேன்.. இந்தா காசு, டிக்கெட்ட கொடு – பேருந்தில் சண்டையிட்ட மூதாட்டி

ஓசியில் நான் வரமாட்டேன்.. இந்தா காசு, டிக்கெட்ட கொடு – பேருந்தில் சண்டையிட்ட மூதாட்டி

கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து டிக்கெட் வாங்கும் மூதாட்டி

கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து டிக்கெட் வாங்கும் மூதாட்டி

அதிமுக ஐடி விங்கை சேர்ந்த பிரித்விராஜ் என்பவர், பக்கத்து வீட்டு பாட்டியை அழைத்துச் சென்று இந்த வீடியோவை பதிவாக்கி பரப்பியுள்ளதாக, திமுக செய்தி தொடர்பாளர் ராஜிவ் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாடே ஓசியில் போனாலும் நான் போகமாட்டேன் என்று கூறி, மூதாட்டி ஒருவர் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

  திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் செய்யும் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இதன் மூலமாக தங்களுக்கு மாதந்தோறும் பலநூறு ரூபாய் மிச்சம் ஆகுவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

  இருப்பினும் பெண்களுக்கு போதிய இலவச பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற சில குற்றச்சாட்டுகளும் இந்த திட்டத்தில் காணப்படுகிறது. ஒட்டுமொத்த அளவில் தமிழக அரசின் பாராட்டைப் பெற்ற திட்டங்களில் ஒன்றாக மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமைந்துள்ளது.

  கதையல்ல வரலாறு : ராஜராஜ சோழனின் வரலாறு

  இதற்கிடையே, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக அமைச்சர் பொன்முடி, ஓசியில் பெண்கள் பயணம் செய்வதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

  இந்த நிலையில், அரசுப் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி ஒருவர் தமிழ்நாடே ஓசியில் சென்றாலும் நான் ஓசியில் போகமாட்டேன் என்று கண்டக்டரிடம் அடம்பிடித்து டிக்கெட்டை வாங்கியுள்ளார்.

  இதுதொடர்பான வீடியோ இன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

  இதற்கிடையே, அதிமுக ஐடி விங்கை சேர்ந்த பிரித்விராஜ் என்பவர், பக்கத்து வீட்டு பாட்டியை அழைத்துச் சென்று இந்த வீடியோவை பதிவாக்கி பரப்பியுள்ளதாக, திமுக செய்தி தொடர்பாளர் ராஜிவ் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Coimbatore