• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம் என ஏமாற்ற மாட்டேன்: மு.க.ஸ்டாலின்

எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம் என ஏமாற்ற மாட்டேன்: மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம் என ஏமாற்ற மாட்டேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. இதையொட்டி, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "100 நாட்களை கடந்தது குறித்து நீங்கள் எல்லாம் பெருமையாக பேசினீர்கள். ஆனால், எனக்கு அடுத்து வரும் காலத்தைப் பற்றிய நினைப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது.

    தேர்தலுக்கு முன்பு எனக்கோ திமுகவுக்கோ இருந்த எதிர்பார்ப்பைவிட, இந்த 100 நாட்களில் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது. இன்னும் பணிகளை செய்ய வேண்டும் என ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்.

    திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட இப்போது தேர்தல் நடந்தால் திமுகவுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். அந்தளவுக்கு சிறப்பான பெயரை பெற்றிருக்கிறோம். அந்த பெயரை காலமெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். அமைச்சர்கள், தலைவர்கள், எம்எல்ஏக்களுக்கு நன்றி.

    எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம் என உங்களையும் என்னையும் ஏமாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. படிப்படியாக அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்பது உறுதி.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் தாயுள்ளத்தோடு திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரியில்லாத பட்ஜெட்டை கொடுத்திருக்கிறோம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இப்போதுதான் தொடங்கியிருக்கிறோம். அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். கருணாநிதி சொன்னது இன்னும் என் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. சொன்னதை செய்வோம், செய்வதைச் சொல்வோம். அவர் இருந்து செய்ய வேண்டியதை அவருடைய மகன் நிச்சயம் செய்வான்.

    நிதிநிலைமை மட்டும்தான் கொஞ்சம் கவலை தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது. அதையும் விரைந்து சீர்செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சீர்மிகு தமிழகத்தை உருவாக்குவோம். இந்த பெரும் பொறுப்பை நான் என் தோள் மீது சுமக்க தயாராகிவிட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: