கூட்டணி விவகாரங்களை நான் பார்த்துக் கொள்கிறேன் - கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் விளக்கம்

கூட்டணி விவகாரங்களை நான் பார்த்துக் கொள்கிறேன் - கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் விளக்கம்

கமல் ஹாசன்

கூட்டணி விவகாரங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் தேர்தல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் அறிவுறுத்தி உள்ளார்.

  • Share this:
மக்கள் நீதி மையம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி கடந்த வாரம் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் கமலஹாசன். இன்று தொடங்கி 3 நாட்கள் எட்டு பகுதிகளாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கோவை, மதுரை, கடலூர், நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 100 தொகுதி பொறுப்பாளர்களை கமலஹாசன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

அப்போது பேசிய அவர் கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் தேர்தல் பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்.

தொகுதி பொறுப்பாளர்களிடம் உங்களுடையது மிகவும் கடினமான பணி. அதைச் சிறப்பாக செய்யுங்கள் என்றும் அறிவுரை வழங்கியிருக்கிறார் கமல்ஹாசன்.
Published by:Karthick S
First published: