தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக அரசு மற்றும் தனியார் மருத்தவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிகத்தில் 266 மையங்களில் தடுப்பூசி ஒத்திகை பார்க்கப்பட்ட நிலையில், 166 மையங்களில் 4 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. முதல் தடுப்பூசி மருத்துவர் சங்க மாநிலத் தலைவர் செந்திலுக்கு போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ராஜாஜி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜனும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கொரோனா தடுப்பூசியை நிச்சயமாக போட்டுக் கொள்வேன் என கூறினார். இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.