முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாட்டிலேயே நம்பர் 1 மாநிலம் தமிழகம் தான் என்ற இடத்தை அடைவதில் தான் எனக்கு மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்

நாட்டிலேயே நம்பர் 1 மாநிலம் தமிழகம் தான் என்ற இடத்தை அடைவதில் தான் எனக்கு மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசிடமும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் தொடர்புகொண்டு இந்த விவகாரத்தை எப்படிக் கையாள வேண்டும் என்று நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசிடமும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் தொடர்புகொண்டு இந்த விவகாரத்தை எப்படிக் கையாள வேண்டும் என்று நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசிடமும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் தொடர்புகொண்டு இந்த விவகாரத்தை எப்படிக் கையாள வேண்டும் என்று நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாட்டிலேயே நம்பர் 1 மாநிலம் தமிழகம்தான் என்ற இடத்தை அடைவதில் தான் எனக்கு மகிழ்ச்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர்கள் இன்றைக்கு பல துன்பங்களுக்கு, துயரங்களுக்கு ஆளாகியிருக்கக் கூடிய சூழ்நிலையில், பரிதவித்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த தமிழர்கள்,சமீப நாட்களாக தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கக்கூடிய செய்திகளை எல்லாம் நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

அதுதொடர்பாக நேற்றே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இதுதொடர்பாக மத்திய அரசிடமும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் தொடர்புகொண்டு இந்த விவகாரத்தை எப்படிக் கையாள வேண்டும் என்று நாங்கள் ஆலோசித்து வருகிறோம். எனவே அதற்கொரு விடிவுகாலத்தை இந்த தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞர் இருந்திருந்தால் முதல்வரின் பணியை பார்த்து கண்ணீர் விட்டிருப்பார்: பேரவையில் துரைமுருகன் உருக்கம்..

மேலும் பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் நான் மேற்கொள்ளவிருக்கும் துபாய் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பலமுறை கூறியிருக்கிறேன், இந்தியாவில் நம்பர் 1 முதல்வர் என பாராட்டப்படுவது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அதைவிட மகிழ்ச்சி இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் தமிழகம்தான் எனக் கூறும்படி வரவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். அதற்கு இன்று மாலை நான் மேற்கொள்ளவிருக்கும் துபாய், அபுதாபி பயணம் நிச்சயம் துணை நிற்கும்" என்று அவர் கூறினார்

இதைத் தொடர்ந்து தமிழக சட்டப் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

முன்னதாக, முதல்வரின் துபாய் பயணம் வெற்றி பெற சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் துறைமுருகன் வாழ்த்து தெரிவித்து அவருக்கு பொன்னாடை போத்தினார். மேலும், தலைவர் கலைஞர் மட்டும் இருந்திருந்தால் முதல்வரின் பணியை பார்த்து கண்ணீரை வடித்திருப்பார். மற்றவர்கள் பார்ப்பதற்கு முன்பு அந்த கண்ணீரை அவர் துணியால் துடைக்கும் காட்சியை நான் நினைத்து பார்க்கிறேன் என்று உருக்கமாக பேசினார்.

First published:

Tags: MK Stalin, TN Assembly