திமுகவின் கடைசி தொண்டனாக நிற்கிறேன்: நடிகர் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் எனவும், அப்போது, ஊழல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

அதிமுக அரசை கண்டித்து, கோவை மாவட்டம் பனப்பட்டி கிராமத்தில், திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மு.கண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் பேசிய உதயநிதி, திமுக என்றாலே போராட்டம் தான் என்றும், நீதிமன்றம் வரை சென்று போராடித்தான் இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வாங்கி இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும், அப்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக அமைச்சர்கள் அனைவரும் சிறை செல்வார்கள் எனவும் அவர் பேசினார். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி வரிசையில் வந்துவிட்டார் என முதலமைச்சர் விமர்சித்ததை பற்றி பேசிய அவர், தொண்டர்கள் வரிசையில் தான் கடைசியாக நிற்பதாக கூறினார்.
Published by:Saroja
First published: