பத்தாண்டு அதிமுக ஆட்சியில் 780 சங்கங்களில் 482 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, நகைக்கடன் 48 லட்சத்து 84 ஆயிரத்து 786 பேருக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 35 லட்சத்து 37 ஆயிரத்து 653 பேர் தகுதியானவர்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால், 12 லட்சம் பேருக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற கூறினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழகதத்தில் உள்ள 4451 கூட்டுறவு சங்கங்களில் 780 சங்கங்களில் 482 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Must Read : முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு.. நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டில் குவிந்த போலீஸ்- குமரியில் பரபரப்பு
மேலும், கூட்டுறவு சங்கங்களில் 4 ஆயிரத்து 816 கோடி ரூபாய்க்கான நகை கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 37 ஆயிரம் பேருக்கான நகைக்கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்று ஐ பெரியசாமி பேரவையில் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.