தமிழக சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது ஜல்லிகட்டு யாருடைய ஆட்சி காலத்தில் தடை செய்யபட்டது? யாருடைய ஆட்சியில் ஜல்லிகட்டு பெறபட்டது? எனற வாதம் நடைபெற்றது. அப்போது செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் எதிர் கட்சி துணைத்தலைவர் ஓ பன்னீர்செல்வத்தை
அதிமுக உறுப்பினர்கள் எல்லாம் ஜல்லிகட்டு நாயகர், ஜல்லிகட்டு நாயகர் என்று அழைக்கின்றனர் அவர் எத்தனை ஜல்லிகட்டில் கலந்துகொண்டு காளைகளை அடைக்கினார் என கேள்வி எழுப்பினார்,
இதற்க்கு பதில் அளித்த ஓ பன்னீர்செல்வம் இளம் வயது காளையாக இருந்தபோது பெரியகுளத்தில் பல காளைகளை அடக்கியதாகவும், திமுக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காளையை விலங்குகள் பட்டியலில் சேர்ததால் தான் ஜல்லிகட்டு நடத்த முடியாமல் போனதால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதன் பிறகு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற்று அதிமுக ஆட்சியில் ஜல்லிகட்டிற்க்கு அனுமதி வாங்கியதாகவும் தெரிவித்தார்.
Also Read : உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு ரத்து - காரணம் என்ன?
ஆகேவேதான் ஜல் ஜல் ஜல் என தமிழகத்திற்க்கு ஜல்லிகட்டு நடைபெற்றதாக கூறினார். அப்போது குறிகிட்ட காங்கிரஸ் கட்சிகுழு தலைவர் செல்வ பெருந்தகை காங்கிரஸ் - திமுக ஆட்சியிகல் ஜல்லிகட்டை தடை செய்யவில்லை. பீட்டா மற்றும் பூளுகிராஸ் அமைபுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடைபெற்றதாகவும், மேலும் அதிமுக ஜல்லிகட்டை பெற்று கொடுக்கவில்லை மக்கள் போராட்டதால் ஜல்லிகட்டு கிடைத்ததாக கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.