உங்களுக்கு கொடுப்பதற்கு உயிரை தவிர, என்னிடம் வேறு ஏதும் இல்லை: சுயேட்சையாக போட்டியிடும் இயக்குனர் கெளதமன்

கெளதமன் மக்களுடன் பிரச்சாரத்தின் போது

உங்களுக்கு கொடுப்பதற்கு உயிரை தவிர, என்னிடம் வேறு ஏதும் இல்லை. சட்டமன்றத்தில் உங்களுக்காக போராட பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும், தமழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், இயக்குநருமான கௌதமன் வேப்பூர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

 • Share this:
  பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும், தமிழ் பேரரசு கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன் தனக்கு பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கூறி வேப்பூர் வட்டார பகுதிகளான மேலக்காளிங்கராய நல்லூர், நல்லூர், ஒகளூர், அத்தியூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

  மேலும் படிக்க... திருச்சி, கோவை ஆட்சியர்கள் பணியிடமாற்றம்...

  அப்போது, " நான் ஒரு போராளி, இந்த மண்ணிற்காக போராடி வருகிறேன், ஜல்லிக்கட்டுக்காக நான் போராடியதை நீங்கள் அறிவீர்கள், என்னிடம் கொடுப்பதற்கு உயிரைத்தவிர வேறு ஏதும் இல்லை. மற்ற அரசியல் கட்சி வேட்பாளர்கள் பண பலம் பெற்றவர்கள் அவர்களை போல என்னால் பணம் கொடுக்க முடியாது. உங்களுக்காகவும், இந்த மண்ணை காப்பாற்றுவதற்காகவும் சட்டமன்றத்தில் குரல் கொடுபேன் எனவே எனக்கு பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று இளைஞர்கள், பெண்கள் வயதானவர்கள் என்று பலரத்தப்பட்ட வாக்களார்களிடமும் நேரடியாக பேசி வாக்கு சேகரித்தார்".

  தனக்கு பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று சுயேட்சை வேட்பாளர் கெளதமன் பலாப்பழம் கொடுத்து வாக்கு சேகரித்தார்


  அப்போது அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், கை குலுக்கியும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

  செய்தியாளர்: ஆர்.ராஜவேல், பெரம்பலூர்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: