அநீதியை அழிக்க பெருமாளின் பேரன் அவதாரமாக வந்துள்ளேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் மாற்று கட்சியில் இருந்து விலகிய 50 பேர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். பின் செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறும்போது, ஓராண்டு சாதனை என்று கூட்டம் போட்டு கூறும் அளவுக்கு தான் உள்ளது. சாதனை என்பது மக்களுக்கு தெரியனும். காமராஜர் சாதனையை கூட்டம் போட்டு கூறவில்லையே படம் எடுத்து விளம்பரம் தேடுவது தேவையில்லாதது. அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவசம் பிறர் பயணிக்க நான்கு மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஓட்டை உடைசல் பேருந்தில் அமர்ந்து பயணம் செய்வோர் குடைபிடித்து தான் செல்ல வேண்டியுள்ளது.
இலவசம் என்பது ஒரு ஏமாற்று திட்டம் மக்கள் பணத்தை எடுத்து இலவசம் என்ற பெயரில் ஏமாற்றுகிறார்கள் அண்ணாமலை திமுக ஊழல் குறித்து பேச என்ன தகுதியிருக்கு? பாஜக ஆட்சியில் ரபேல் விமானம் ஊழல் நடந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு வரும் பொழுது பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்த கோப்புகள் காணாமல் போனது எப்படி?
நீரவ்மோடி இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்லும் போது ரூ.500 கோடி பாஜகவுக்கு கொடுத்த பின்புதான் நாட்டை விட்டு நான் தப்பினேன் என்று கூறி உள்ளார். திமுக ஊழலை மட்டும் பேசுகிறார் அதிமுகவின் பத்தாண்டுகால ஊழல் குறித்து ஏன் பேசுவதில்லை?
நேர்மையானவர் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். மலையை உடைத்து எம் சாண்ட் விற்பனை செய்கிறார்கள் மலையை உருவாக்க முடியுமா? கன்னியாகுமாரியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பாதியை அதானி நொருக்கி உள்ளார். அதை பற்றி அண்ணாமலை பேசுவது இல்லை. பாஜகவிற்கு சாதி, மதம் சாமி இதைத்தவிர வேறு கோட்பாடுகள் இல்லை. தமிழகத்தில் இரண்டு அமைச்சர் மட்டும்தான் ஊழல் செய்துள்ளார்களா? மற்ற அமைச்சர்கள் எல்லாம் நேர்மையானவர்களா?
ஒரு மாதத்திற்கு ரூ5000 கோடி முதலமைச்சர் வீட்டுக்கு செல்கிறது. அதில் டாஸ்மாக் வருமானம் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் செல்கிறது என்று கூறுகிறார்கள். எல்கேஜி, யுகேஜி தேவையில்லை அரும்பு, மொட்டு, மலர் என்ற பள்ளி வகுப்புகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏற்படுத்துவோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
3 வயதிலிருந்து குழந்தைகளை பள்ளியில் படிக்க வைப்போம். ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பில் குழந்தைகளை சேர்ப்போம். அவர்களது திறமையை பார்த்து அவர்களுக்கு கல்வி போதிக்கப்படும். கேரளாவில் அரசு பள்ளிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. டெல்லியில் அரசு பள்ளிகளை நவீன படுத்தப்பட்டதால் மாணவர் சேர்க்கை அதிகமாகி உள்ளது இங்கு ஏன் முடியவில்லை? திராவிட கட்சிகளுக்கு மாற்று நாங்கள்தான் நாங்கள் தான் சிறந்த கட்சி.
நாங்கள் தான் அனைத்தையும் முதல்வர், அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று வருகிறோம். வழி இல்லாமல் என்னை மூன்றாவது தலைவராக ஒரு தொலைக்காட்சி தேர்ந்தெடுத்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து இளைஞர்கள் பாஜகவில் சேர்வது பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான். 2024 தேர்தலில் அண்ணாமலை தனித்து நிற்பாரா? திமுக அல்லது அதிமுக கூட்டணியில் தான் பாஜக தேர்தலை சந்திக்கும்.
நான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் - நான் ஒரு அவதாரம் அநீதி அக்கிரமம் நடக்கும் இடத்தில் நான் வந்து நிற்பேன். ஜீயர்கள் திமுக அமைச்சர்கள் நடமாட முடியாது என்றார்கள் அவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.
செய்தியாளர் - முத்துராமலிங்கம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Seeman