Home /News /tamil-nadu /

மீண்டும் உக்ரைனுக்கு செல்ல விரும்பவில்லை.. இந்தியாவிலேயே கல்வி கற்க உதவுங்கள்.. அரசுக்கு கோவை மாணவி கோரிக்கை!

மீண்டும் உக்ரைனுக்கு செல்ல விரும்பவில்லை.. இந்தியாவிலேயே கல்வி கற்க உதவுங்கள்.. அரசுக்கு கோவை மாணவி கோரிக்கை!

உக்ரைன் போரில் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தவிர்த்து வந்த போது பெற்றோர்களின் வலியும் தவிர்ப்பும் சொல்லில் அடங்காதவை.

உக்ரைன் போரில் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தவிர்த்து வந்த போது பெற்றோர்களின் வலியும் தவிர்ப்பும் சொல்லில் அடங்காதவை.

உக்ரைன் போரில் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தவிர்த்து வந்த போது பெற்றோர்களின் வலியும் தவிர்ப்பும் சொல்லில் அடங்காதவை.

  எங்களை உயிரோடு சொந்த நாட்டிற்கு அழைத்து வந்த மத்திய, மாநில அரசுகள் எங்கள் மருத்துவ கல்வியை இந்தியாவிலேயே தொடர உதவ வேண்டும் என உக்ரைனில் இருந்து கோவை வந்த மருத்துவ மாணவி கோரிக்கை வைத்துள்ளார்.

  கோவை பாப்பம்பட்டி பிரிவில் வசித்து வரும் மதனின் மகள் ஸ்ரீரஞ்சினி உக்ரைன் நாட்டில் உள்ள வினிட்ஸ்யாவில் நேசனல் பிரகவ் மெமோரியல் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் எம்.பி.பி.எஸ் ஐந்தாம் ஆண்டு படித்து வருகிறார்.

  உக்ரைன் நாட்டில் உள்ள தலைநகர் கியோவ்வில் இருந்து சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த நேசனல் பிரகவ் மெமோரியல் மெடிக்கல் பல்கலைக்கழகத்திலிருந்து கடந்த மாதம் 24ம் தேதி போர் சூழல் ஏற்பட்டதையடுத்து இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

  கோவையைச் சேர்ந்த ஸ்ரீரஞ்சனி மற்றும் இந்திய நாட்டு மாணவர்கள் 50 பேர் ஒரு குழுவாக இணைந்து இந்தியாவிற்குள் திரும்பும் முயற்சியில் தன்னிச்சையாக ஈடுபட்டனர். தொடர்ந்து 28 ஆம் தேதி ருமேனியா பார்டர் சென்றடைந்த அவர்கள் இரண்டு நாட்கள் குளிர், உணவின்றி தவித்தல் உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் சிரமம் அடைந்துள்ளனர்.

  இதையடுத்து இந்த மாதம் மார்ச் மூன்றாம் தேதி ருமேனியா பார்டரில் இருந்து விமானம் மூலம் கிளம்பிய அவர்கள் 4ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு டெல்லி வந்தடைந்தனர். மேலும் அன்று விமான சேவைகள் அனைத்தும் அதிக பயன்பாட்டில் இருந்ததால் உக்ரைனில் இருந்து வந்த மாணவர் குழுவினர் சிலர் டெல்லியில் உள்ள வைகை இல்லத்தில் இலவசமாக தங்க வைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு தேவையான உணவு வசதிகளையும் மத்திய அரசு தயார் படுத்திக் கொடுத்தது.

  இதையும் படிங்க - புதிய கல்விக் கொள்கையிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா? டிடிவி தினகரன் கேள்வி

  பின்னர் ஐந்தாம் தேதி டெல்லியிலிருந்து மாணவர்கள் தமிழக அரசு உதவியுடன் சென்னை கோவைக்கு அழைத்து வரப்பட்டனர்.
  இதில் கோவையைச் சேர்ந்த ஸ்ரீரஞ்சனி போர் சூழலில் சொந்த ஊருக்கு திரும்பி வருவோமா என்ற அச்சத்தில் இருந்ததாகவும், அதை பெற்றோரிடம் வெளிப்படுத்தி அவர்களையும் வேதனைப்படுத்த விரும்பாததையும் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பகிர்ந்துள்ளார்.

  மேலும் நியூஸ் 18 தொலைக்காட்சி மூலம் நடைபெற்ற நேரலையில் நானும் எனது தந்தையும் பேசிக் கொள்ளும் வீடியோ மத்திய மாநில அரசுகளுக்கு எங்களின் வலியை உணரச் செய்தது. அதன்மூலம் எங்களை உடனடியாக தொடர்பு கொண்ட அரசு அதிகாரிகள் விரைவாக நாடு திரும்ப உதவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் கூறும்போது, எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே மருத்துவ கல்வியில் ஆர்வம் இருந்தது. அதற்கு இங்கு எனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் உக்ரைனுக்கு சென்றேன். ஆறு ஆண்டு எம்.பி.பி.எஸ்.,வகுப்பில் தற்போது ஐந்தாம் ஆண்டு படிப்பை தொடங்கி படித்து வருகிறேன்.

  உக்ரைனில் போர் தொடங்கியபோது ஆரம்பத்தில் பல்வேறு சிரமங்களை அடைந்தோம். ஆனால் உணவு, தங்குமிடம் போன்றவற்றில் ஏற்பட்ட இடர்பாடு மற்றும் அதிகப்படியான குளிரால் பெரிதும் பாதிக்கப்பட்டோம்.

  எங்களது மன வலியை பெற்றோரிடம் பகிரவில்லை. அவர்களும் தங்களின் வேதனையை எங்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. மனதளவில் தயார் படுத்திக்கொண்டு நம்பிக்கையுடன் இந்தியாவிற்குள் வர முயற்சி செய்தோம். அதற்காக முதல் கட்டமாக ருமேனியா பார்டருக்கு தன்னிச்சையாக சென்றோம். இந்த பயணம் இரண்டு நாட்கள் தொடர்ந்தது. நாங்கள் இறங்கிய இடத்தில் உக்ரைன் போர் வீரர்கள் எங்களிடம் கோபமாக நடந்து கொண்டனர்.

  இதையும் படிங்க - Chennai Power Cut: சென்னையில் வரும் திங்கள் அன்று (07-03-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

  பின்னர் ருமேனியா பார்டரில் அம்மக்கள் எங்களை நன்கு கவனித்து எங்களுக்கு தங்குமிடம் அமைத்துக் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து இந்திய அரசு எங்களுக்கு பல்வேறு உதவிகள் செய்தது. இந்திய அரசு இல்லை என்றால் நாங்கள் இங்கு வந்திருக்க முடியாது. தமிழக அரசும் பல்வேறு உதவிகள் செய்தது. எங்களை டெல்லி அழைத்து வந்தபோது நன்கு கவனித்தனர்.
  இப்படி பல்வேறு சூழல்களில் எங்களுக்கு உதவி செய்த மத்திய மாநில அரசுகள் முக்கியமாக எங்களின் கல்விக்கு உதவ வேண்டும்.

  அடுத்த கட்டமாக நாங்கள் மீண்டும் உக்ரைன் சென்று படிக்க விரும்பவில்லை. பெற்றோருடன் இருந்து படிக்க விரும்புகிறோம்.
  எங்களுக்கான தேர்வு வைத்து, உதவ வேண்டும். இந்திய நாட்டிற்கும், உக்ரைன் மருத்துவ கல்விக்கும் பாடத்திட்டங்களில் பெரிய வித்தியாசம் இருக்கும் சூழலில் முறையாக உதவ வேண்டும் என தெரிவித்தார்.

  உக்ரைன் போரில் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தவிர்த்து வந்த போது பெற்றோர்களின் வலியும் தவிர்ப்பும் சொல்லில் அடங்காதவை. அந்த தவிப்பை பெற்ற கோவையைச் சேர்ந்த சிவரஞ்சினியின் பெற்றோர் மத்திய மாநில அரசுகளுக்கும், ஊடகங்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். அத்துடன் மீண்டும் அங்கு சென்று கல்வி கற்பது பெற்றோர்களாகிய எங்களுக்கு வேதனை அளிப்பதாகவும் இங்கேயே கல்வி கற்க அரசுகள் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

  இதுகுறித்து சிவரஞ்சினியின் தாயார் ஹேமலதா மதன் மோகன் கூறும்போது, எனது மகள் போரின் பாதிப்பால் அடைந்த சிரமங்களை நினைத்துப் பார்த்தாலே மனம் பதைபதைக்கிறது. மீண்டும் அவள் கல்வி தொடர வேண்டும். ஆனால் உக்ரைனுக்கு செல்வது என்பதை கனவில் கூட நினைத்து பார்க்க விரும்பவில்லை. எனது மகள் உயிருடன் பாதுகாப்பாக வர உதவிய இந்த அரசுகள் என் மகள் மற்றும் அவரைப்போன்ற சக இந்திய மாணவர்கள் இங்கேயே கல்வியைத் தொடர அரசுகள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

  போர் பதட்டத்தில் மாட்டிக்கொண்ட இந்திய மாணவர்கள் மீண்டும் உக்ரைன் செல்ல விரும்பாத சூழலில் மத்திய மாநில அரசுகள் உயிர் காக்க உதவியது போல, மாணவர்களின் கல்வி வாழ்வாதாரம் உயிர் பெற உதவ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  - கோவை ஜெரால்ட்
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Coimbatore, Russia - Ukraine

  அடுத்த செய்தி