Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்ப்போம் என அண்ணாமலை பேசியது எனக்கு பிடிக்கவில்லை.. குருமூர்த்தி

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்ப்போம் என அண்ணாமலை பேசியது எனக்கு பிடிக்கவில்லை.. குருமூர்த்தி

குருமூர்த்தி

குருமூர்த்தி

திமுகவில் ஒவ்வொரு தலைமுறையும் கலைஞராக முடியாது, காங்கிரஸில் ஒவ்வொரு தலைமுறையும் நேருவாக முடியாது என துக்ளக் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்ப்போம் என அண்ணாமலை பேசியது எனக்கு பிடிக்கவில்லை,  பாஜக இந்த தவறை செய்யக் கூடாது என துக்ளக் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

  துக்ளக் இதழின் 52வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் பேசிய குருமூர்த்தி, ஒன்றிய அரசு என்று தமிழக அரசு அழைப்பது தேசவிரோதம். கேவலமான செயல். சட்டம், நீதி போன்ற அம்சங்கள் திமுகவிற்கு இல்லை. திமுக-வுக்கு ஆன்மீகம் தான் முதல் எதிரி. நாத்தீகர் வேடத்தில் ஆத்தீகர்கள் திமுக ஆட்சி காலத்தில் வருகிறார்கள். அப்படி வருகிறவர்களால் ஆபத்து அதிகம்.

  பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையால் பல பிரச்சனைகள் தமிழகத்தில் தீர்கிறது. ஒரு நாள் அவர் தமிழகத்தின் தலைவர் ஆவார். ஏழுபேர் விடுதலை விவகாரத்தில் 30 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் விடுதலை செய்வது என்பது தவறான நடவடிக்கை.

  பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்திற்கு காரணம் மத்திய அரசு என்பது தவறான வாதம். பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

  கலைஞர் இயற்கையான தலைவர். விஷயமறிந்த தலைவர். தமிழக அரசியலை ஒரேயடியாக திருப்பிப்போட்டவர். கலைஞர், இந்தி படித்திருந்தால் இந்தியா ஆபத்தில் சிக்கியிருக்கும். கருணாநிதி எம்.ஜி.ஆர்-ஐ உருவாக்கியதால் தான் தமிழகம் பிழைத்தது. 33ஆண்டுகள் அதிமுக தமிழகத்தை ஆட்சி நடத்தாமல் போயிருந்தால் தமிழகம் காடாக மாறியிருக்கும்.

  குடி பழக்கம் இல்லாத தலைமுறையை குடிக்கு அடிமையாக்கியது திராவிட மாடல் ஆட்சியாளர்கள். மதுவிலக்கை தமிழகத்தில் கொண்டு வரமாட்டார்கள். இந்தி படிக்க வேண்டும் என்று சொல்வதில் தவறில்லை. இந்தி அலுவல் மொழி குறித்த அமித்ஷாவின் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அமித்ஷா இந்தி கட்டாயம் என்றோ, திணிப்பதை ஆதரித்தோ அவர் சொல்லவில்லை.

  நிதிச்சுமையை காரணம் காட்டி பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற இயலாது என்பதா? கே.பாலகிருஷ்ணன் கேள்வி

  தமிழகத்தில் உண்மையை மறைக்க பத்திரிக்கைகள் போராடுகிறார்கள். தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டும் லஞ்சத்தில் பங்கு போட்டுக்கொள்கிறார்கள். இருவரில் யார் ஆட்சியில் இருந்தாலும் லஞ்சத்தில் பங்குபோட்டுகொள்கிறார்கள்.

  உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எடுத்த நிலை, அமெரிக்காவை உலுக்கிவிட்டது. உக்ரைன் விவகாரத்தில் முதுகெலும்பு உள்ள ஆட்சியால் தான் உறுதியான முடிவு எடுக்கப்பட்டது. காங்கிரஸின் அவல நிலை நாட்டிற்கு நல்லதல்ல. காங்கிரஸ் பலவீனம் அடைந்திருந்தாலும் பெரிய கட்சி .

  திமுகவில் ஒவ்வொரு தலைமுறையும் கலைஞராக முடியாது. காங்கிஸில் ஒவ்வொரு தலைமுறையும் நேருவாக முடியாது. காங்கிரஸ் கட்சி மோடி எதிர்ப்பிலிருந்து வெளியேறி கட்சியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிக்கைகள் பிரதமர் மோடியை எதிர்க்கிறார்கள். ஸ்டாலினைப் பற்றி எழுத பயப்படுகிறார்கள்.

  பயங்கரவாதத்தை தடுத்து அழிக்க முடியும் என்றால் அது நரேந்திர மோடியால் தான் முடியும். முத்தலாக் சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. வேறு எந்த அரசியல் கட்சிக்கும் முதுகெலும்பு இல்லை. இதனால் முஸ்லீம் பெண்கள் மோடிக்கு வாக்களித்தனர்.

  தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்ப்போம் என அண்ணாமலை பேசியது எனக்கு பிடிக்கவில்லை. பாஜக இந்த தவறை செய்யக் கூடாது. மத்திய அரசு இதில் தோல்வி அடைந்திருக்கிறது.

  திராவிட மாடல் பல பரிமாணங்களை கொண்டுள்ளது. ஈவேரா தமிழ், தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்று சொன்னது திராவிட மாடலின் முதல் பரிமாணம். பேரறிஞர் அண்ணா 67ல் ஆட்சிக்கு வந்தபோது மும்மொழி கொள்கையை ஏற்றார்.

  ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை துவக்கியது திராவிட மாடலின் சாதனை. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் மற்ற மாநிலத்திற்கும் பரவ திராவிட மாடல்தான் காரணம்.

  ஸ்டாலின் தன்னைத் தானே புகழ்ந்துகொள்கிறார். திராவிட மாடல் என்பது தொடர் பஜனையாக மாறிவிட்டது என்று அவர் கூறினார்.
  Published by:Esakki Raja
  First published:

  Tags: BJP, DMK

  அடுத்த செய்தி