மக்களுக்காக ரஜினியுடன் இணைந்து களம் இறங்க தயாராக இருக்கிறேன் - கமல்ஹாசன்

மக்களுக்காக ரஜினியுடன் இணைந்து களம் இறங்க தயாராக இருக்கிறேன் - கமல்ஹாசன்

கமல்ஹாசன்

மக்கள் பிரச்சினைக்காக, ‌மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து நானும் ரஜினியும் இணைந்து களம் இறங்க தயாராக இருக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பின் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமலஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘அதிமுக கட்சிக்கு நீட்சியாக நான் சொல்லவில்லை. எம்ஜிஆருக்கு நீட்சியாக எந்த நடிகரு ம் இருக்கலாம். எம்.ஜி.ஆர் எப்போதும் மக்கள் திலகம் தான்,‌ அவர் திமுகவில் இருந்த போதும், அதிமுக தொடங்கிய போதும் மக்கள் திலகமாக தான் இருந்தார். எம்ஜிஆர் ஏழரை கோடி மக்களுக்கு சொந்தம். அதில் நானும் ஒருவன். விஸ்வரூப தரிசனம் என்பது சின்னத்திற்கு எதிராக யார் தூண்டிவிடுகிறார்கள் யார் செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம் நம்புகிறோம். எனது தென் தமிழக சுற்றுப் பயணத்திற்கு அனுமதி கொடுத்தது ஏன்? பின் அதனை எடுத்தது ஏன்? இதுவே என் கேள்வி ஒவ்வொரு இடத்திலும் அனுமதி மறுக்கப்படுகிறது.

என் நண்பர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க உள்ளார். அவரது கொள்கை குறித்து இனி தான் பார்க்க வேண்டும். மக்கள் பிரச்சினைக்காக, ‌மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து நானும் ரஜினியும் இணைந்து களம் இறங்க தயாராக இருக்கிறேன் என்றார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: