முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வெறும் வார்த்தையால் சொல்ல முடியாது.. வேதா இல்லம் சிக்கல் குறித்து ஜெ.தீபா

வெறும் வார்த்தையால் சொல்ல முடியாது.. வேதா இல்லம் சிக்கல் குறித்து ஜெ.தீபா

வேதா இல்லம் தொடர்பான எந்த பிரச்னையும் சட்ட ரீதியாக சந்திப்போம் என்று ஜெ.தீபா நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வேதா இல்லம் தொடர்பான எந்த பிரச்னையும் சட்ட ரீதியாக சந்திப்போம் என்று ஜெ.தீபா நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வேதா இல்லம் தொடர்பான எந்த பிரச்னையும் சட்ட ரீதியாக சந்திப்போம் என்று ஜெ.தீபா நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

    போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதாக முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, வேதா நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதேபோல, வேதா நிலையத்துக்கு இழப்பீடாக 67.90 கோடி ரூபாயும் நீதிமன்றத்தில் டிபாசிட் செய்யப்பட்டது.

    வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சேஷசாயி, நினைவு இல்லம் அமைப்பது பொதுப்பயன்பாடும் இல்லை என்றும் ஏற்கனவே நினைவிடம் உள்ள நிலையில் நினைவில்லம் அமைப்பது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்றும் கூறி வேதா நிலையத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்து கடந்த 24ம் தேதி தீர்ப்பளித்தார். மேலும் வேதா இல்லத்தின் சாவியை ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு இருந்தார்.

    இதை தொடர்ந்து இன்று வேதா இல்லத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணியடம் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து வேதா இல்லத்தின் சாவி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    Also Read : இனி தமிழிலில் இன்சியல் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

    இந்நிலையில் வேதா இல்லம் சாவி பெற்ற பின் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தீபா பிரத்யேக பேட்டியளித்தார். அதில், வேதா இல்லத்தின் சாவியை பெற்றதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது. அத்தையின் ஆசிர்வாதத்தை பெற்றது போல் உள்ளது. ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த வீட்டில் அவரது வாரிசுகள் வாழ வேண்டுமென்று தான் தொண்டர்கள் நினைப்பார்கள். தற்போதைக்கு இந்த வீட்டில் பராமரிப்பு பணிகளை தான் மேற்கொள்ள இருக்கிறோம்.

    ' isDesktop="true" id="636063" youtubeid="nitQsfZPyAk" category="tamil-nadu">

    வேதா இல்லம் கிடைப்பதில் பல சிரமங்கள், பிரச்னைகளை சந்தித்தோம். அதை சொல்ல வார்த்தையே இல்லை. வேதா இல்லம் அரசுயுடைமை ஆக வேண்டுமென மேல்முறையீடு செய்து உள்ளார்கள். எந்த ஒரு பிரச்னையையும் நானும், தீபக்கும் இணைந்து சட்ட ரீதியாக சந்திப்போம். இதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை என்று தெரிவித்தார்.

    First published: