வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை - ஓ.பன்னீர்செல்வம்

வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை - ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

சில விஷமிகள் தவறான கருத்துகளை சமூகவலைதளங்களில் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

 • Share this:
  வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், சில விஷமிகள் தவறான கருத்தை பரப்பி வருவதாகவும் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

  இது குறித்து அவர்  தமது ட்விட்டர் பக்கத்தில், “வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சில விஷமிகள் சமூகவலைதளங்களில் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

  முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published: