முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான தகவல் தவறானது - அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மறுப்பு

பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான தகவல் தவறானது - அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மறுப்பு

தோப்பு வெங்கடாசலம்

தோப்பு வெங்கடாசலம்

Thoppu Venkatachalam | அதிமுகவில் இருந்து இருமுறை எம்.எல்.ஏவாக இருந்த தோப்பு வெங்கடாசலம் 2021 சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதனை அவர் மறுத்துள்ளார்.

அதிமுகவில் இருந்து இருமுறை எம்.எல்.ஏவாக இருந்த தோப்பு வெங்கடாசலம் 2021 சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார். அதன்பின் அதிமுகவில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

Also Read : உற்றுநோக்கும் பாஜக… இரட்டை இலை முடக்கப்படுமா? சூடுபிடிக்கும் அரசியல் களம்

தற்போது திமுகவில் இருக்கும் தோப்பு வெங்கடாசலம் ஒரிரு நாட்களில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலுக்கு தோப்பு வெங்கடாசலம் மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜகவில் நான் இணையும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: ADMK, BJP, DMK