வரக்கூடிய காலங்களில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 30 தொகுதிகளில்
பாஜக தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் அளவிற்கு மக்களின் மனநிலை மாறிவிட்டது என
திமுக எம்.பி
திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சூர்யா சிவா நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில், திமுகவில் 15 வருடமாக உழைத்த எனக்கு கட்சியில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. திமுக சர்வாதிகாரத்துடன் செயல்படுவதால் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். எனவே பாரதிய ஜனதா கட்சியின் இன்று இணைய உள்ளேன்.
எனக்கு திமுகவில் அங்கீகாரம் கிடைக்க கூடாது என்பதை அப்பா தடுத்தார் என்பது உண்மைதான். ஆனால் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டியது தலைமையின் கடமை. ஏன் அங்கீகாரம் கிடைக்கவில்லை என காரணம் கேட்டால் கனிமொழியைச் சார்ந்தவன் என்ற காரணத்திற்காக எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறுகின்றனர்.
இதையும் படிங்க - திராவிட மாடல் என்பது இந்திய மாடலின் ஓர் அங்கம் தான்: வானதி சீனிவாசன்
திமுகவை பொறுத்தவரை பல மாவட்டச் செயலாளர்களுக்கு எம்.எல்.ஏ சீட்டுகள் வழங்கப்படவில்லை. அதுவே பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் யாருக்கும் தெரியாத நபர்களுக்கு வாரியம் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியில் கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் என்பதற்காக அங்கீகாரம் தராமல் உள்ளார்கள். ஆனால், பிராமண பார்வையில் பார்க்கக்கூடிய பாஜக கட்சியில் அதுபோன்ற சூழல் இல்லை என்பதை நான் இணைவது மூலம் உணர முடிகிறது’ என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.