“நான் பிராமணர்... சவுகிதார் ஆக முடியாது” சுப்பிரமணியன் சாமி அதிரடி

சுப்பிரமணியன் சாமி (கோப்புப்படம்)

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஜெயிலுக்குப் போவார் என்றும் சுப்பிரமணியன் சாமி கூறினார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான சுப்பிரமனியன் சாமி எப்போதும் தனது அதிரடிக் கருத்துக்களுக்கு பெயர் போனவர். தற்போதைய டிரெண்ட் ஆக சவுகிதார் குறித்தும் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

  பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி சர்ச்சைக் கருத்துக்களுக்கு பெயர் போனவர். கட்சியின் முடிவுகளில் எப்போதும் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் இவர், தீவிர தேர்தல் அரசியலிலும் ஈடுபடுவது இல்லை. கொல்கத்தாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “பொருளாதாரம் குறித்து மோடி, அருண் ஜெட்லிக்கு எதுவும் தெரியாது” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

  இந்நிலையில், தமிழ் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் சமீபத்திய பாஜகவின் யுக்தியான சவுகிதார் குறித்தும் பேசியுள்ளார்.

  Read Also... மோடி, அருண் ஜெட்லி இருவருக்கும் பொருளாதாரம் என்னவென்றே தெரியாது - சுப்பிரமணியன் சுவாமி

  “அமித் ஷா முதல் அனைத்து பாஜக தலைவர்களும் சவுகிதார் (காவலன்) என்று பெயருக்கு முன் அடைமொழி சேர்த்துள்ளனர். நீங்கள் சேர்க்கவில்லை?” என்று கேள்வி கேட்க, “நான் சவுகிதார் இல்லை. நான் பிராமணர்... சவுகிதார் ஆக முடியாது. நான் கருத்து கொடுப்பேன். அந்த கருத்தின் பிரகாரம் சவுகிதாருக்கு வேலை செய்வேன்” என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

  மேலும், ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார். வந்தால் ஜெயிலுக்கு போவார்” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

  Also See....

  Published by:Sankar
  First published: