நான் நலமாக உள்ளேன், வதந்திகளை நம்ப வேண்டாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து பூரண நலடத்துடன் இருப்பதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

நான் நலமாக உள்ளேன், வதந்திகளை நம்ப வேண்டாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்
கே.பி.அன்பழகன்
  • Share this:
தமிழகத்தில் மூன்று அமைச்சர்கள் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதில், அமைச்சர்களில் முதலில் தொற்று உறுதியான உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடந்த ஜூன் 30 அன்று முதல் ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்தன.

அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து பூரண நலம் பெற்று விட்டதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும், வரும் 15-ம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை செய்தியாளர் சந்திப்பு நடத்தி வெளியிட உள்ளதாகவும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் தெரிவித்தார்.


ஜூலை 14 அன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பீர்களா? என்று கேட்டதற்கு, 'அதுகுறித்து அறிவிப்பு இன்னும் எனக்கு வரவில்லை. வந்தால் பங்கேற்பேன்' என்றார்.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading