இந்தியாவிற்கு பொதுவான ஒரே மொழி என்பதை தாம் எதிர்ப்பதாக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஆளுநர் ஆர்.என் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ரவி, காசிக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பை ஆங்கிலேயர்கள் சிதைத்ததாகவும் அதனை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நடைபெறுவதாகவும் கூறினார்.
இதையும் படிக்க : மன உளைச்சலாக இருக்கு.. அவப்பெயர் ஏற்படுத்துறாங்க.. - எடப்பாடி பழனிசாமி
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, சட்ட படிப்புகளில் தாய்மொழி கொண்டு வரப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நீதி வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவது விரைவான நீதி என்ற கொள்கையை குலைத்துவிடும் என்று குறிப்பிட்ட கிரண் ரிஜிஜு, சாமானியர்களும் வழக்காடு மொழியை புரிந்துகொள்ள வேண்டும் என்றும், சாமானியனுக்கும் நீதித்துறைக்குமான இடைவெளியை குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நாடு முழுவதும் ஒரு பொதுமொழி என்பதை தான் ஏற்கவில்லை என்றும், அனைத்து மாநில மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் தரவேண்டுமென்றும் அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இந்தியா முழுமைக்கும் ஒரே மொழியை அமல்படுத்துவதை நான் எதிர்க்கிறேன். பிராந்திய மொழிகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையின்படி, 22 மொழிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, மிகவும் பழமையான இந்திய மொழியாக தமிழ் இருக்கிறது என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன். வழக்கறிஞர், நீதிபதிகள், பொதுமக்கள் என யாராக இருந்தாலும் பொதுவான மொழியாக தமிழ் இருக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.