டாஸ்மாக் மூடப்பட்டாலும், மூடாவிட்டாலும் ஆட்சி மாற்றம் நிச்சயம் - கார்த்தி சிதம்பரம்

”ஆன்லைனில் பணமில்லா பரிவர்த்தனை மூலம் மதுவிற்பனை கொண்டு வரலாம்”

டாஸ்மாக் மூடப்பட்டாலும், மூடாவிட்டாலும் ஆட்சி மாற்றம் நிச்சயம் - கார்த்தி சிதம்பரம்
கார்த்திக் சிதம்பரம்
  • Share this:
டாஸ்மாக் மூடினாலும், மூடாவிட்டாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும் என்று கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். மேலும், தமிழக அரசு குறித்த ரஜினியின் கருத்தை அவர் வரவேற்றுள்ளார். 

சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மற்றும் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் சுமார் 500 தூய்மை பணியாளர்களுக்கு இலவச அரிசி, காய்கறிகளை நாடாளுமன்ற உறுப்பினார் கார்த்தி சிதம்பரம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மதுக்கடைகள் திறப்பது தொடர்பான கருத்துகள் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்களில் வேறுபட்டு இருக்கும். அதனால், மதுவிற்பனையில் சில நிபந்தனைகளுடன்  உடன் நேரத்தை குறைத்து, ஆன்லைன் முலமாகவும் விற்பனை செய்யலாம்.

தமிழகத்தில் ரஜினிகாந்த் கூறிய ஆட்சி மாற்றம் குறித்த கருத்தை நான் வரவேற்கிறேன். ஆனால், கண்டிப்பாக டாஸ்மாக் கடைகள் மூடினாலும் மூடாவிட்டாலும், ஆட்சி மாற்றம் நடைபெறும். பூரணமதுவிலக்கு என்பது உலகளவில் தோல்வியில் முடிந்துள்ளது. அதற்கு சாத்தியமில்லை, படிப்படியாக நேரத்தை குறைத்து கொள்ளலாம். ஆன்லைனில் பணமில்லா பரிவர்த்தனை மூலம் மதுவிற்பனை கொண்டு வரலாம்” என்று கூறினார்.


Also see...Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: May 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading