சென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று

சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலையின் பணியாளர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று
ஹுண்டாய் தொழிற்சாலை
  • News18
  • Last Updated: May 25, 2020, 9:09 AM IST
  • Share this:
கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மூன்று கட்ட ஊரடங்கு உத்தரவு நிறைவுபெற்று, நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி, தொழிற்சாலைகள் 50 சதவீத தொழிலாளர்களுடன் பணிகளை தொடங்கலாம் என அறிவித்தது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நாட்டின் மிகப்பெரிய இரண்டாவது கார் தொழிற்சாலையான ஹூண்டாய் கார் தொழிற்சாலை, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வால் மே 8ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.

அரசு விதித்த நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் சமூக இடைவெளியுடன் தொழிற்சாலையில் பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.


இந்நிலையில் ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் நடந்த மருத்துவ பரிசோதனையில் தொழிற்சாலையில் மூன்று பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பணியாளரின் குடும்பத்தினர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் நேற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தொழிற்சாலை நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading