காதல் மனைவிக்கு சிலை வைத்த கணவர்! புதுக்கோட்டையில் ஒரு ஷாஜஹான்

புதுக்கோட்டை உசிலங்குளத்தில், 48 ஆண்டுகாலமாக தன்னுடன் வாழ்ந்த காதல் மனைவியின் இறப்பிப் பிரிவை தாங்கி கொள்ள முடியவில்லை என்று சுப்பையா கூறுகிறார்.

Web Desk | news18
Updated: February 14, 2019, 8:13 AM IST
காதல் மனைவிக்கு சிலை வைத்த கணவர்! புதுக்கோட்டையில் ஒரு ஷாஜஹான்
காதல் மனைவிக்கு சிலை வைத்த கணவர்
Web Desk | news18
Updated: February 14, 2019, 8:13 AM IST
காதலித்து திருமணம் செய்த காதல் மனைவி இறந்த நிலையில், அவரது நினைவாக தனது வீட்டிலேயே ஐம்பொன்னில் மனைவிக்கு சிலை அமைத்த கணவர், நாள் தோறும் வழிபட்டும் வருகிறார்.

புதுக்கோட்டை உசிலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. பிஎஸ்என்எல் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவரது மனைவி செண்பகவல்லி. தனது மாமன் மகளான செண்பகவல்லியை, சுப்பையா கடந்த 1958-ம் ஆண்டு காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு 8 பிள்ளைகள். அவர்கள் அனைவரையும்  நன்றாக படிக்க வைத்து திருமணம் செய்து வைத்து வைத்தனர். அவர்கள் தற்போது தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு செண்பகவல்லி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

பிள்ளைகள் அவரவர் வீடுகளில் வசிப்பதால், சுப்பையாவை தனிமை வாட்டியுள்ளது. அப்போது, தனது காதல் மனைவிக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இதை தொடர்ந்து 3 லட்ச ரூபாய் செலவில் தனது மனைவி செண்பகவல்லிக்கு 3.5 அடியில் ஐம்பொனில் திருவுருவ சிலையை செய்துள்ளார். அந்த சிலையை தனது வீட்டில் வைத்து தினம் தோறும் வழிபட்டு வருகிறார்.

48 ஆண்டுகாலம் தங்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்ற நிலையில், மனைவியின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று சுப்பையா கூறுகிறார். இன்றைய சூழ்நிலையில் காதலித்து திருமணம் செய்துக்கொள்பவர்கள், சிலர் சீக்கிரமே பிரிந்து விடும் நிலையில், சுப்பையா தனது மனைவி மீது வைத்திருக்கும் காதல் எடுத்துக்காட்டு என்றால் அது மிகையல்ல.

Also see... BSNL நிறுவனம் இழுத்து மூடுபடுகிறதா?
First published: February 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...