• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மனைவி குழந்தைகளைக் கொலை செய்த கணவன் துாக்கிட்டு தற்கொலை... (வீடியோ)

மனைவி குழந்தைகளைக் கொலை செய்த கணவன் துாக்கிட்டு தற்கொலை... (வீடியோ)

Youtube Video

நீலகிரி மாவட்டத்தில், மனைவி குழந்தைகளைக் கொலை செய்த கணவன் தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்பத் தகராறு குடும்பம் முழுவதிற்கும் எமனானது எப்படி?

  • Share this:
    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை பகுதியில் ஏராளமான தனியார் தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. அதில் கிரேக்மோர் என்ற தனியார் எஸ்டேட்டில் 300-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களுடன் ஜார்க்கண்ட் மாநிலத்தை சார்ந்த 27 வயதான அசோக் பகத், தன் மனைவி சுமதி குமாரி, மகன் 8 வயதான அபய், மகள் 4 வயதான ரேஷ்மா ஆகியோருடன் தங்கி பணியாற்றி வந்தார். வழக்கம் போல புதன்கிழமை தம்பதி பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளனர்.

    வியாழக்கிழமை காலை வெகுநேரமாகியும் அவரது வீட்டிலிருந்து யாரும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது சுமதி குமாரி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். அவரது மகன் அபய் தலையில் ரத்த காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கொலக்கம்பை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    மேலும் படிக்க...திருப்புமுனை: அரசியல் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அந்த ‘பஞ்ச் டயலாக்’

    அங்கு வந்த காவல்துறையினர் மோப்பநாய் மூலம் அசோக் பகத்தை தேடினர். அப்போது தனது வீட்டருகில் உள்ள யாரும் வசிக்காத ஒரு வீட்டின் கதவை உடைத்து அங்கு, அசோக் பகத் துாக்கிட்டுத் தொங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. அத்துடன் வீட்டருகில் இருந்த குடிநீர் தொட்டியில் ரேஷ்மாவின் சடலமும் மிதந்தது தெரியவந்தது.

    நான்கு பேரின் சடலங்களை மீட்ட போலீசார், உடற்கூறாய்விற்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த கொலக்கொம்பை காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில், தம்பதி இடையே குடும்பத் தகராறு இருந்ததும் அதனால் இருவரும் அடிக்கடி சண்டை, தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. குடும்பச் சண்டையில் ஆத்திரமடைந்த அசோக் பகத், மனைவி குழந்தைகளைக் கொலை செய்து விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கி்ன்றனர். அதேநேரம், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட நிலையிலும் ஒருவர் தற்கொலை செய்த நிலையிலும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், குன்னுாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: