• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காதல் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் வளைகாப்பு நடத்திய கணவர்... நெல்லையில் நெகிழ்ச்சி சம்பவம்

காதல் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் வளைகாப்பு நடத்திய கணவர்... நெல்லையில் நெகிழ்ச்சி சம்பவம்

அரசு மருத்துவமனையில் வளைகாப்பு

அரசு மருத்துவமனையில் வளைகாப்பு

அரசு மருத்துவமனையில் வைத்து எளிய முறையில் சாராளுக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என கணவர் கருப்பசாமி முடிவெடுத்துள்ளார்.

  • Share this:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மாயமான் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 28). இவர் ஆலங்குளத்தில் உள்ள துணிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். கருப்பசாமி அதே பகுதியை சேர்ந்த சாராள் என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்  ஒராண்டிற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார் .

சாராளுக்கு தாய் தந்தை இல்லாத காரணத்தால் கருப்பசாமி தன் மனைவி மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். சாராள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவருக்கு அம்மா, அப்பா இல்லாததால் வளைகாப்பு நடைபெறவில்லை. இந்த சூழ்நிலையில் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கருப்பசாமி சாராளை திருநெல்வேலி  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார்.

Also Read : கோவையில் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயது சிறுமி... தன்னார்வலர்களின் முயற்சியால் ₹18 கோடி மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டது

அவரை பரிசோதித்த  மருத்துவர்கள் பிரசவம் நடைபெற சில நாட்கள் ஆகும் எனவும் ஆனால் அதுவரை இங்கேயே தங்கி  சிகிச்சை பெறும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில், தனது காதல் மனைவிக்கு வளைகாப்பு நடத்த முடியவில்லையே என்ற ஏக்கம் கருப்பசாமி மனதை பாதித்துள்ளது. பல்வேறு மருத்துவ வசதி அதிகமாகி விட்டாலும்  தலை பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறவிக்கு சமம் என்ற நிலையில் மனைவியின் ஆசையை எப்படியாவது நிறைவேற்றிட வேண்டும்  எனவே எப்படியாவது மருத்துவமனையில் வைத்து எளிய முறையில் சாராளுக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என கருப்பசாமி முடிவெடுத்துள்ளார்.

உடனே தனது ஆசையை நெல்லை பிரசவ வார்டில் உள்ள மருத்துவர்களிடம் கூறும்போது அவர்களும் பச்சைக் கொடி காட்டியுள்ளனர். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டு விழாக்கோலம் பூண்டது. வளைகாப்புக்கு தேவையான பூ, வளையல்கள் ஆகியவற்றை கருப்பசாமி வாங்கி வந்தார். செவிலியர்கள் மற்றும் பிரசவ வார்டில் உள்ள பெண்கள் முன்னிலையில் சாராளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. வீட்டில் அம்மா, அப்பா உறவினர்கள் இருந்தால் எப்படி நடக்குமோ அதில் எள் அளவும் குறை இல்லாத்து போன்று உரிய வழக்கப்படி செவிலியர்கள் மிகுத்த பாசத்துடன் சாராளுக்கு வளையல்கள் அணிவித்து முகம் கைகளில்  சந்தனம் குங்குமம் பூசி ஆசிர்வாதம் செய்தனர்.

Also Read : திருச்சி : சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்களுடன் மாவட்ட ஆட்சியர் & அதிகாரிகள் பேச்சுவார்த்தை

திடீர் இன்ப அதிர்ச்சியாக தனக்கு நடந்த இந்த வளைகாப்பு எண்ணி சாராளும் ஆனந்த கண்ணீர் விட்டார்.   அண்டை மாநிலமான கேரளாவில்  கணவனின் வரதட்சனை கொடுமைக்கு பெண்கள் ஆளாகி தற்கொலை செய்யும் சூழல் அதிகரித்து வரும் நிலையில்
பிரசவத்திற்கு வந்த இடத்தில் அரசு மருத்துவமனையில் வைத்து தனது காதல் மனைவியின் வளைகாப்பு ஆசையை நிறைவேற்றிய கருப்பசாமியின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: