Home /News /tamil-nadu /

பீர் பாட்டிலால் காதல் மனைவியின் மண்டையை உடைத்த கணவன்! சென்னையில் பரபரப்பு

பீர் பாட்டிலால் காதல் மனைவியின் மண்டையை உடைத்த கணவன்! சென்னையில் பரபரப்பு

பீர் பாட்டிலால் காதல் மனைவியின் மண்டையை உடைத்த கணவன்! சென்னையில் பரபரப்பு

பீர் பாட்டிலால் காதல் மனைவியின் மண்டையை உடைத்த கணவன்! சென்னையில் பரபரப்பு

beer bottle: சென்னை நங்கநல்லூர் அருகே மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் மனைவியை பீர் பாட்டிலால் அடித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை நங்கநல்லூர் தில்லைகங்கா நகர் 2,வது பிரதான சாலையில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கமலக்கண்ணன் (32) அரிசி மாவு வியாபாரம் செய்து வருகின்றார். இவரது மனைவி வினிதா (28). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் ஆவர்.

    இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடம் ஆன நிலையில் 10,மாதத்தில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. திருமணமாகிய நாளில் இருந்தே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில், இன்றும் வழக்கம்போல் மீண்டும் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த கணவர் கமலக்கண்ணன் வீட்டில் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து வினிதாவின் தலையில் அடித்துள்ளார். இதில் வினிதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அதிகளவில் ரத்தம் வருவதை கண்டதும் வீட்டிலிருந்து கமலக்கண்ணன் தப்பி சென்றுள்ளார்.

    இதையும் படிங்க -  ராஜ்பவன் கணக்குப்பிள்ளையாக பாஜக தலைவர் அண்ணாமலை எப்போது மாறினார்? - கி.வீரமணி

    இதைத்தொடர்ந்து, வினிதாவின் அலறல் சத்தம் கேட்ட, அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் அடிப்படையில் சம்பவ நடந்த இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக 108,ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்ணை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தப்பி ஓடிய கமலக்கண்ணன் போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலும் விசாரணையில் வினிதா அடிக்கடி போனில் பேசி கொண்டு இருப்பதைக் கண்டு மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் பீர் பாட்டில் அடித்தது தெரியவந்துள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Beer, Chennai, Husband Wife

    அடுத்த செய்தி